தொகுப்பு சுபயோக தாசன்
எம்மில் பலரும் தங்களுக்குக் கிடைத்த சொற்ப வாய்ப்புகளை பயன்படுத்தி கடுமையாக உழைத்தாலும் முன்னேற்றமும், வளர்ச்சியும் என்பது மிக மிக அரிதாகவே இருக்கிறது.
இதற்கு முதன்மையான காரணம் எமக்கு முன்னோர்களின் ஆசி இல்லாததே. முன்னோர்களின் ஆசி இருந்தால் மட்டுமே குலதெய்வம் வழியாகவும், நட்சத்திர சார பலன்கள் வழியாகவும், திசா நாதன் வழியாகவும், கோச்சார கிரகங்கள் வழியாகவும், எம்மை வந்தடைய வேண்டிய பலன்கள் முழுமையாக கிடைக்கும் என்பதனை முதலில் தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள்.
எனவே முன்னோர்களின் ஆசி பெறுவதற்கு அதாவது எம்முடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம் அல்லது பித்ருக்களின் சாபங்கள் இருந்தால்... அதனை களைவதற்கான முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட வேண்டும். குறிப்பாக பித்ரு தோஷ பரிகார ஸ்தலங்கள் எனப்படும் ஆலயங்களுக்கு குறிப்பிட்ட திகதியில்.. குறிப்பிட்ட தருணத்தில்.. சென்று வழிபட்டு, எம்முடைய பிரார்த்தனையை சமர்ப்பிக்க வேண்டும். இதன் பிறகு தான் எமக்கான வாய்ப்புகளும் கிடைத்து அதனூடாக வளர்ச்சியும் சாத்தியமாகும்.
இந்நிலையில் எம்முடைய முன்னோர்கள் பித்ரு தோஷங்களையும், பித்ரு சாபங்களையும் நீக்குவதற்கு பல ஆலயங்களை பட்டியலிட்டு இருக்கிறார்கள். இதில் சில ஆலயங்களுக்கு நாம் சென்று வந்திருப்போம். ஆனாலும் நம்முடைய தோஷங்கள் குறைந்திருக்காது. இதற்கு தவறான சமயத்தில்.. தவறான தருணத்தில்.. நாம் இதற்கான முயற்சியில் ஈடுபட்டது தான் காரணமாகும்.
மேலும் எம்முடைய முன்னோர்கள் வலிமைமிக்க பித்ரு தோஷ சாபத்தை நீக்க தமிழகத்தில் உள்ள மூன்று ஆலயங்களை வழிபடுமாறு முன்மொழிந்திருக்கிறார்கள். திருவெண்காடு, ஆவூர், மேல உளூர் ஆகிய ஊர்களின் உள்ள சிவலாயங்களுக்கு சென்று முறையான பரிகாரத்தை மேற்கொண்டால்.
முன்னோர்களின் சாபம் நீங்கும். அதிலும் குறிப்பாக புதன் பகவானின் ஆலயம் என குறிப்பிடப்படும் அருள்மிகு ஸ்வேதாரண்யேஸ்வரர் ஆலயத்திற்கு புதன் கிழமைகளில் சென்று உச்சி வேலைக்குள் அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, ஈஸ்வரனையும், புதபகவானையும் வணங்கி, அதன் பிறகு அங்குள்ள ருத்ர பாதம் எனப்படும் சன்னதியில் பிரத்யேக பிரார்த்தனையை முன்வைத்து வணங்கிட வேண்டும். அதனைத் தொடர்ந்து அங்குள்ள குருக்கள் சொல்லும் தர்ப்பண பரிகாரத்தையும் மேற்கொண்டால் வலிமை மிக்க முன்னோர்களின் சாபம் குறைந்து, அவர்களின் மனம் குளிர்ந்து, ஆசி வழங்குவர்.
இதனைத் தொடர்ந்து ஆவூர் பசுபதீசுவரர் ஆலயத்திற்கு சென்று அங்குள்ள பஞ்ச பைரவரை வணங்க வேண்டும். இங்கும் ஈஸ்வரனையும், பஞ்ச பைரவரையும் பிரத்யேகமாக வணங்கிய பிறகு, உங்களுடைய பித்ரு சாபங்கள் நீங்கும். இந்த ஆலயத்தில் 21 நல்லெண்ணெய் தீபங்களை ஏற்றி முன்னோர்களின் ஆசி நீங்க வழிபட்டால் உங்களுக்கு சுபிட்சம் கிட்டும்.
மேலும் தஞ்சாவூரிலிருந்து ஒரத்தநாடு எனும் பகுதிக்கு சாலை மார்க்கமாக பயணிக்கும் போது மேல உளூர் எனும் சிறிய ஊர் வரும். அங்கிருந்து இரண்டு கிலோமீற்றர் தொலைவிற்கு பயணித்தால், பரிதியப்பர் அல்லது பாஸ்கரனேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லலாம். இந்த ஆலயத்தில் உங்களின் வயதிற்கு ஏற்ப நெய் தீபங்களை ஏற்றி முன்னோர்களின் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டும். இதன் பிறகு உங்களது வாழ்க்கையில் மாய தடைகள் அகன்று கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் முழுமையாக கிடைத்து வெற்றி கிட்டும்.
இந்த மூன்று ஆலயத்திற்கும் சென்று வந்த பிறகு, பலருக்கும் பித்ரு தோஷம் நீங்கி, குலதெய்வ வழிபாட்டிற்கான வாய்ப்புகள் கிடைத்து, குலதெய்வத்தை வணங்கி.. வாய்ப்புகளை உருவாக்கி.. வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM