பிரஜின் நடிக்கும் 'படிக்காத பக்கங்கள்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published By: Vishnu

02 Jan, 2024 | 05:26 PM
image

தமிழ் திரையுலகில் நம்பிக்கையுடன் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு 'படிக்காத பக்கங்கள்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் செல்வம் மாதப்பன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'படிக்காத பக்கங்கள்'. இதில் நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருக்கிறார். டாலி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் மற்றும் எஸ் எஸ் சாய் தேவ் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

மூர்த்தி- சரண் சண்முகம் இணைந்து படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜே எஸ் ஏ எம் சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எம். செல்வம் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் இணைந்து  தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகை யாஷிகா ஆனந்தின் வித்தியாசமான தோற்றம்  ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்