சித்தார்த்துடனான உறவை வெளிப்படுத்திய அதிதி ராவ்

Published By: Vishnu

02 Jan, 2024 | 02:36 PM
image

கடந்த சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே, நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இடையே காதல் மலர்ந்திருப்பதாக ஊடகங்கள் அவ்வப்போது தகவல்களை வெளியிட்டு வந்தன.

இந்த நிலையில், முதன்முறையாக, தம் இருவரது உறவையும் வெளிப்படுத்தும் விதமாக, நடிகை அதிதி ராவ், தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறார்.

புத்தாண்டு வாழ்த்துக்களுடன் வெளிவந்திருக்கும் அந்தப் படத்தில், அதிதி மற்றும் சித்தார்த், வெளிநாடொன்றில் 2024 புத்தாண்டைக் கொண்டாடுவது தெரிகிறது. 

முதன்முறையாக, அதிதி மற்றும் சித்தார்த் ஆகியோர், ‘மகாசமுத்திரம்’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அப்போது முதலே, இவ்விருவருக்குமிடையே காதல் மலர்ந்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் ஊடகங்கள் வழியே கசிந்து வந்தன. அதை, அதிதியின் இந்தப் படம் உறுதி செய்வதாக அமைந்திருக்கிறது.

சித்தார்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம், ‘சித்தா’. விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பெருவரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தையடுத்து, ‘டெஸ்ட்’ என்ற படத்தில் சித்தார்த் நடித்து வருகிறார். இந்தப் படத்தில், சித்தார்த்துடன் மாதவன், நயன்தாரா, மீரா ஜெஸ்மின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ஏற்கனவே ‘இந்தியன் 2’ படத்திலும் கமல்ஹாசனுடன் சித்தார்த் இணைந்து நடித்திருந்தார். இந்தப் படம் இவ்வாண்டு வெளியாகும் எனத் தெரிகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமூக வலைதள வாசிகளின் வாழ்வியலை விவரிக்கும்...

2026-05-21 16:16:00
news-image

தென் தமிழக நாட்டார் கதையில் நாயகனாக...

2026-05-21 15:55:53
news-image

அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'கான் சிட்டி'...

2026-05-21 15:52:28
news-image

தாழ் திறவா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...

2026-05-20 14:41:54
news-image

சாதனை படைத்து வரும் ஜூனியர் என்டிஆர்...

2026-05-20 14:41:32
news-image

கதாநாயகனாக அறிமுகமாகும் லண்டன் வாழ் ஈழத்தமிழர்...

2026-05-21 00:12:53
news-image

ஜியோ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் ஜூலையில்...

2026-05-20 13:22:56
news-image

நடிகர் ருத்ரா நடிக்கும் ‘யெல்லோ யெல்லோ...

2026-05-20 13:17:54
news-image

தக்ஸீலா” திரைப்பட விமர்சனம் – செயற்கை...

2026-05-20 11:31:52
news-image

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு ஆதரவளிக்கும் இசைஞானி...

2026-05-20 11:31:30
news-image

இதுவரை யாரையும் கைநீட்டி அடித்ததில்லை... ஆனாலும்...

2026-05-20 11:31:15
news-image

சாதனை படைத்து வரும் ராம்சரணின் 'பெத்தி'...

2026-05-20 11:30:49