ஜப்பானை தாக்கிய கடும் பூகம்பம் மற்றும் அதன் பின்னரான தொடர்ச்சியான நில அதிர்வுகள் காரணமாக 30க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள்இடம்பெறுவதை தொடர்ந்து சேதங்கள் குறித்த புதிய விபரங்கள் வெளியாகியுள்ளன.
நொட்டோ வளைகுடாவை தாக்கியபூகம்பம் காரணமாக கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ள அதேவேளை தீபரவல் காணப்பட்டதுடன் சுனாமியும் தாக்கியுள்ளது.
செவ்வாய்கிழமை சுனாமிஎச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ளது போதிலும் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான நொட்டோவுடனான தொடர்புகள் தொடர்ந்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.
பூகம்பத்தினால்வீதிகள்அழிந்ததால் அந்த பகுதிக்கு தரைமார்க்கமாக செல்வது கடினமாக உள்ளதாக ஜப்பான் பிரதமர்தெரிவித்துள்ளார்.
பூகம்பம் தாக்கிய பகுதிக்கு ஹெலிக்கொப்டர்கள் மூலம் சென்றுள்ள அதிகாரிகள் சேதமடைந்த வீடுகள் வீதிகளையும் தீப்பரவலையும் அவதானித்துள்ளனர்.
27000 பேர் வசிக்கும் வஜிமா நகரமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது இந்த நகரத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். வஜிமா கரையோர நகரம் அதன் காலை சந்தை மற்றும் அரக்கு பொருட்களிற்கு பிரசித்தமானது.
பூகம்பத்தின் பின்னர்இந்த நகரத்தின் தரைமட்டமாகியுள்ள கட்டிடங்களில் இருந்து தீ பரவுவதை அவதானிக்க முடிவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூகம்பத்தின் பின்னர்மூண்டதீயினால்100க்கும் மேற்பட்ட கடைகளும் வீடுகளும் எரிந்து சாம்பலாகியுள்ளன.
சிறிய சுனாமியும் இந்த நகரத்தை தாக்கியுள்ளது.
பேரழிவை சந்தித்துள்ள பகுதிகளில் பொலிஸார் தீயணைப்பு படையினருடன் ஜப்பானின் சுயபாதுகாப்பு படையினரும் இணைந்துள்ளதாக பிரதமர் கிசிடா தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM