மணிப்பூரில் 3 பேர் சுட்டுக் கொலை: ஊரடங்கு அமுல்

02 Jan, 2024 | 11:43 AM
image

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய சிலர் இந்த குற்ற செயலை அரங்கேற்றியுள்ளனர். இந்த சம்பவம் தௌபால் மாவட்டத்தில் உள்ள லிலாங் பகுதியில் நடந்துள்ளது. அதையடுத்து தௌபால், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களில் ஊரடங்கு அமல் செய்துள்ளது அம்மாநில அரசு.

சட்ட ஒழுங்கு சீர்குலைந்த காரணத்தாலும், அசம்பாவித சம்பவங்கள் மற்றும் உயிர் சேதத்தை தடுக்கும் விதமாக கடந்த டிசம்பர் 31-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு உத்தரவு ரத்து செய்யப்பட்டு முழு ஊரடங்கு உத்தரவு இம்பால் மேற்கு மாவட்டத்தில் உடனடியாக அமல் செய்யப்பட்டுள்ளது என அம்மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

“இந்தச் சம்பவத்தை அரசு சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மணிப்பூர் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மக்கள் வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்பதை உறுதி அளிக்கிறேன். அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவும்” என அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் மக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பிறகு ஆவேசமடைந்த மக்கள் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை அன்று அடையாளம் தெரியாத சிலர் மேற்கொண்ட தாக்குதலில் காவல் துறையை சேர்ந்த மூவர் காயமடைந்தனர்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் இதுவரை 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதுடில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு :...

2025-02-08 16:39:16
news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30
news-image

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப்...

2025-02-05 10:36:48