(நா.தனுஜா)
தேசபந்து தென்னகோனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தவறுவதன் மூலம் ஜனாதிபதியும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், அரசாங்கமும் சித்திரவதைகளிலிருந்து விடுபடுவதற்கு இலங்கைப்பிரஜைகள் கொண்டிருக்கும் அடிப்படை உரிமையை மீறுவதாக சட்டத்தரணியும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான ஏர்மிஸா ரீகல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நபரொருவரைக் கைதுசெய்து தன்னிச்சையாகத் தடுத்துவைத்து, சித்திரவதைகளுக்கு உட்படுத்தியதன் மூலம் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டிருப்பதாகவும், எனவே அதற்குப் பொறுப்பாளிகளான தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 4 பொலிஸ் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நபருக்கு தமது சொந்தப்பணத்தில் தலா 5 இலட்சம் ரூபாவை நட்டஈடாக செலுத்தவேண்டும் எனவும் கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதனையடுத்து பதில் பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னகோன் நீக்கப்படவேண்டுமென சட்டத்தரணிகள் கூட்டிணைவு, சித்திரவதைக்கு எதிரான இலங்கை ஒன்றிணைவு உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் வலியுறுத்திவரும் நிலையில், இதுபற்றி சட்டத்தரணியும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான ஏர்மிஸா ரீகல் அவரது எக்ஸ் தளத்தில் (டுவிட்டர்) செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:
பொலிஸ்காவலின் கீழான சித்திரவதைகள் இலங்கையில் வழமையாக நடைபெறும் விடயமாக மாறிவிட்டது. இதனைத் தடுப்பதற்கோ அல்லது இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதற்கோ பொலிஸார் தவறியிருப்பதாக உயர்நீதிமன்றம் மீளவும் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தரான தேசபந்து தென்னகோன் சித்திரவதைகளுடன் தொடர்புபட்டிருப்பதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து 15 நாட்கள் கடந்துள்ளன.
ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரும் தேசபந்து தென்னகோன் தொடர்ந்தும் பதில் பொலிஸ்மா அதிபராகப் பதவி வகித்துவருகின்றார்.
பதில் பொலிஸ்மா அதிபருக்குரிய அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்களை அவரிடமிருந்து மீளப்பெறுவதற்கான நடவடிக்கையோ அல்லது அவர் உள்ளடங்கலாக சித்திரவதைகளுடன் தொடர்புபட்டிருக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை.
மேற்குறிப்பிட்டவாறு நடவடிக்கை எடுப்பதற்குத் தவறுவதன் மூலம் தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நீக்குவதற்கான அதிகாரத்தைக் கொண்டிருக்கும் ஜனாதிபதியும், பொலிஸாருக்குப் பொறுப்பான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும், அரசாங்கமும் சித்திரவதைகளிலிருந்து விடுபடுவதற்கு இலங்கைப்பிரஜைகள் கொண்டிருக்கும் அடிப்படை உரிமையை மீறுகின்றனர்.
இவ்வாறு உரிய நடவடிக்கை எடுப்பதற்குத் தவறுவதன் மூலமும், சித்திரவதை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளைப் பாதுகாப்பதன் மூலமும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்குரிய நியாயம் கிடைப்பதை உறுதிசெய்யாதிருப்பதன் மூலமும் 'சித்திரவதைகளுக்கு முற்றிலும் இடமில்லை' என அரசாங்கம் கூறுவது பொய்யானதொரு விடயமே என்பது வெளிப்பட்டுள்ளது என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM