மன்னார் பொலிஸ் நிலைய கட்டுப்பாட்டுக்குள் உள்ள பரப்பாங்கண்டல் பகுதியில் சக்திவாய்ந்த வெடிக்குண்டு ஒன்று மீட்க்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னார் பரப்பாங்கண்டல் பாலைத்தாழ்வு கிராமத்தில் மேட்டு நிலக்காணி ஒன்றை காணி உரிமையாளர் நேற்று முன்தினம் உழவு இயந்திரத்தின் மூலம் உழுது கொண்டிருந்தபோது அவ் நிலப்பரப்புக்குள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு புதைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து காணி உரிமையாளர் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் குண்டை செயலிழக்கச் செய்யும் இராணுத்தினரின் உதவியுடன் குண்டை மீட்டெடுத்து அதனை செயலிழக்கச் செய்தனர்.

இவ் வெடிகுண்டு சுமார் 10 கிலோ கிராம் எடை கொண்டதாகும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(வாஸ் கூஞ்ஞ)