கண்டி - உன்னஸ்கிரிய ஹெயார் பார்க் தோட்டத்தை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (02) மூன்றாவது நாளாகவும் ஆர்ப்பாட்டம் தொடர்கின்றது.

உன்னஸ்கிரிய - லூல்வத்தை பாதையை மறித்து இவர்கள்கடந்த28 ஆம் திகதியிலிருந்து  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்படி தோட்டத்தில் தமக்கு இரண்டு ஏக்கர் நிலம் வீதம் 500 குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் அதுவரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் தமக்கு இதுவரை காலமும், மாதத்துக்கு 3 அல்லது 4 நாட்களே வேலை வழங்கப்படுவதாகவும், குறைந்தது 21 நாட்களுக்காவது எமக்கு வேலை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.