பொதுஜன பெரமுனவின் பத்து நிபந்தனைகளை நிறைவேற்றும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளேன் - பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா அறிவிப்பு

Published By: Vishnu

31 Dec, 2023 | 12:13 PM
image

ஆர்.ராம்

பொதுஜன பெரமுன விதித்துள்ள பத்து நிபந்தனைகளை நிறைவேற்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளேன் என்று பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாரிய கட்சியாக உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கான கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. எனினும் அவ்வாறு போட்டியிடுவதாக இருந்தால் அக்கட்சியினால் எனக்கு விதிக்கப்பட்டுள்ள பத்து நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில், 

ஜனாதிபதித் தேர்தலில் 51 சதவீத வாக்குகளைப் பெறுவதற்காக, ஏனைய அரசியல் கட்சிகள், அரசியல் குழுக்கள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் கூட்டிணைவதற்கான நடைமுறைச் சாத்தியமான வேலைத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும்.

உலகின் பிற நாடுகளுடன் போட்டியிடக்கூடிய சர்வதேச அளவிலான கல்வியை நாட்டின் மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

உலகில் எந்த நாட்டிலும் பணிபுரியும் வகையில், இந்த நாட்டில் தொழில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சர்வதேச அளவில் உயர்த்தப்பட வேண்டும்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உர மானியத்தை அதிகரித்து விவசாயத்தை மேம்படுத்தி, புதிய கலப்பின விதைகளை அறிமுகம் செய்வதன் மூலம் விளைச்சலைப் பெருக்கி, நவீன விவசாயத்தை உருவாக்கும் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும்.

கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வறுமையை ஒழிக்கவும், சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும், அந்த பகுதிகளுக்கு பணம் புழங்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

கிராமம் மற்றும் நகர்ப்புற மக்களுக்கு பத்து லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 7 சதவீதமாக உயர்த்தி பொருளாதாரத்தை விரிவுபடுத்த வேண்டும். அதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

பொருட்களின் விலையும், வாழ்க்கைச் செலவும் மக்கள் தாங்கும் அளவிற்கு குறைக்கப்பட வேண்டும். தற்போது, விதிக்கப்பட்டுள்ள வற் வரியை குறைக்க வேண்டும்.

அரசுக்கு சொந்தமான வணிகங்கள் அல்லது அரசு சொத்துக்கள் தனியார்மயமாக்கப்படக்கூடாது. மேலும், தற்போது நட்டமடைந்து வரும் அரசு வணிகங்களை இலாபகரமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.

அனைத்து பொதுச் சேவைகளுக்கும் ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு தொழில்நுட்ப தளம் நிறுவப்பட வேண்டும்.

மோசடி மற்றும் ஊழலைத் தடுக்க, அனைத்து அரசாங்க கொள்முதல் மற்றும் கேள்வி மனுக்கோரல் நடைமுறைகளுக்கும், உலகின் பிற நாடுகளில் உள்ளதைப் போல, பொதுமக்கள் தகவல்களைப் பார்க்கக்கூடிய ஒரு வெளிப்படையான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

ஊழல் மற்றும் ஊழல்களை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இலங்கையின் 17 பொதுப் பல்கலைக்கழகங்களையும் சர்வதேச தரவரிசையில் முதல் ஆயிரம் இடங்களுக்குள் கொண்டு வர, அந்தப் பல்கலைக்கழகங்களை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். 

சுற்றுலாத்துறையை மேம்படுத்த வருடத்திற்கு 50 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதற்கான திட்டம் முன்வைக்கப்பட வேண்டும்.

இலங்கை மீண்டும் அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுக்காத வகையில் டொலர்களை ஈட்டும் உத்திகளுடன் கூடிய திட்டவட்டமான புதிய வேலைத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும்.

இவையே அந்த நிபந்தனைகள். 

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை அறிவிப்பதற்கு இன்னும் 286 நாட்கள் உள்ளன. அந்தக் காலப்பகுதியில் பொதுஜன பெரமுனவின் குறித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு நான் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31