மாத்தறை – வெலிகம பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் சார்ஜன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெலிகம பகுதியில் நடாத்தப்பட்ட சுற்றி வளைப்பின் போது, குழுவொன்றினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் துப்பாக்கி பிரயோகமொன்றை மேற்கொண்டு வேனொன்றில் தப்பிக்க முயற்சித்த தருணத்தில் பொலிஸார் பதில் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.
இதன்போது பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட நிலையிலேயே, பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM