தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த பெருமளவிலான பொருட்கள் இந்திய பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இராமநாதபுரம் அருகே புதுமடம் கடற்கரை பகுதியில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (29) இலங்கைக்கு கடத்தல் பொருள் கடத்த உள்ளதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, மரைன் பொலிஸார் புதுமடம் கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை சோதனையிட்ட போது அதில் சோப்பு, எண்ணெய், வாசனை திரவியம் உள்ளிட்ட இந்திய மதிப்பில் 16 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் காணப்பட்டுள்ளது.
இதையடுத்து பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM