தொற்றுநோயாக மாறும் தட்டம்மை

29 Dec, 2023 | 04:54 PM
image

நாட்டில் தற்போது  தட்டம்மை  நோய் தொற்று அதிகளவில் பரவிவருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

நேற்று  வியாழக்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வருடம் மே மாதம் முதல் 710 தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் கல்முனை ஆகிய 9 மாவட்டங்களில் தட்டம்மை நோயாளர்கள் அதிகம் பதிவாகியுள்ளனர்.

இதன்படி,  கொழும்பு மாவட்டத்தில்  299   நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும்,  கம்பஹா மாவட்டத்தில் 232 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் , களுத்துறையில் 36 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தொற்றுநோய் நிபுணர் தெரிவித்தார்.

பதிவாகியுள்ள 710 தட்டம்மை நோயாளிகளில் 123 பேர் ஒன்பது மாதங்களுக்கும் குறைவான குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. 

மேலும், ஒன்பது மாதங்கள் முதல் மூன்று வயது வரையிலான 93 குழந்தைகளும், 4 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட 99 பேரும் , 16 முதல் 20 வயதுக்கு இடைப்பட்ட 44 பேரும் , 21 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட 246 பேரும், 30 வயதுக்கு மேற்பட்ட 105 பேரும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட 9 மாவட்டங்களிலுள்ள 6 முதல் 9 வயதுடைய குழந்தைகளுக்கு  தட்டம்மைக்கான  தடுப்பூசி  ஜனவரி 6 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அந்த மாவட்டங்களில் அமைந்துள்ள  பொது சுகாதார பிரிவில்  தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளலாம். 

இந்த தட்டம்மை நோயினால் குழந்தைகள் உயிரிழக்கக் கூடும் என்பதால், குழந்தைகளுக்கு விரைவில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு பெற்றோர்களுக்கு சுகாதார அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கைத்தொலைபேசிகள், டெப் கணினிகளுடன் சுங்க அதிகாரிகளிடம்...

2025-02-14 13:46:47
news-image

ரயில் மோதி வேன் விபத்து -...

2025-02-14 13:01:44
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-14 12:41:02
news-image

மதுபானசாலையை இடமாற்றக் கோரி பூநகரி பிரதேச...

2025-02-14 12:55:44
news-image

வரக்காபொலயில் லொறி - டிப்பர் வாகனம்...

2025-02-14 12:51:04
news-image

கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ!; காலாவதியான தீயணைப்புக்...

2025-02-14 12:50:11
news-image

மீகஸ்வெவ பகுதியில் உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர்...

2025-02-14 12:48:22
news-image

லசந்த படுகொலை விவகாரத்தை சட்டமா அதிபர்...

2025-02-14 12:00:12
news-image

போலி தகவல்களுடன் கூடிய அறிக்கை ;...

2025-02-14 12:13:46
news-image

கஞ்சா செடிகள், துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது...

2025-02-14 12:33:08
news-image

கிளிநொச்சியில் கட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2025-02-14 12:24:21
news-image

வவுனியா, கிளிநொச்சி மாவட்டத்துக்கான உலக உணவுத்...

2025-02-14 12:23:16