மைதானத்தை அதிரவைத்த சங்காவின் அற்புதமான பிடியெடுப்பு (வைரல் காணொளி)

By Presath

02 Mar, 2017 | 12:34 PM
image

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் நேற்று இடம்பெற்ற போட்டியின் போது சங்காவின் பிடியெடுப்பு  மைதானத்தை அதிரவைத்துள்ளது.

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாடி வரும் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார கராச்சி அணிக்கு தலைமை தாங்கி வருகின்றார்.

நேற்றைய முக்கியமான போட்டியில் சங்கக்காரவின் பிடியெடுப்பொன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இஸ்லாமாபாத் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டெவைன் சுமித்துக்கு, மொஹமட் அமீர் வீசிய பந்து பிடியெடுப்பாக  சங்காவிடம் வர அதனை இலாவகமாக பிடித்து அசத்தினார் சங்கக்கார.

குறித்த பிடியெடுப்பு தற்போது சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right