டுபாயில் இடம்பெற்றுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் நேற்றைய தினம் காலிறுதி போட்டியில்   இஸ்லாமாபாத் யுனைட்டன் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் 44 ஓட்டங்களால் வெற்றிபெற்று கராச்சி அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இஸ்லாமாபாத் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படிபோட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய  கராச்சி அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சனல விக்கட்டுளை இழந்து 126 ஓட்டங்களை பெற்றது.

கராச்சி அணி சார்பில்  பாபர் அஷாம் மற்றும் மலிக் ஆகியோர் தலா 25 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் ருமான் ரஹீஸ் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

127 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இஸ்லாமாபாத் அணி 15.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரம் பெற்று  44 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இஸ்லாமாபாத் அணி சார்பாக அதிகபட்சமாக அசிப் அலி 39 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இமாட் வசீம் 3 விக்கட்டுகளை கைப்பற்றியதுடன்,  போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்நிலையில்   நாளை (03)  கராச்சி அணி அரையிறுதிப்போட்டியில் பேஸ்வர் சல்மி அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.