பெந்தோட்டை EKHO Surf மூலமாக சமுத்திரத்தின் தங்குதடையற்ற காட்சியை தனித்துவமாக அனுபவித்து மகிழ்வதற்கான வாய்ப்பு

29 Dec, 2023 | 10:52 AM
image

புனரமைப்புப் பணிகளுக்குப் பிறகு முற்றிலும் புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் பெந்தோட்டை EKHO Surf, அதன் தனித்துவமான, விசாலமான மற்றும் தங்குதடையற்ற சமுத்திரக் காட்சியை அனுபவிக்குமாறு பிரயாணிகள், விடுமுறை செல்பவர்கள் மற்றும் சமுத்திரத்தை நேசிப்பவர்களுக்கு அழைப்பு விடுகின்றது.

2023 டிசம்பர் 19 அன்று உத்தியோகபூர்வமாக மீளவும் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல் டிசம்பரில் சுற்றுலாப் பருவத்தின் உச்சியில், மிகவும் நேர்த்தியான தருணமொன்றில், இலங்கையின் அழகிய கடற்கரை அழகின் குன்றாத மகிமையுடன், நெகிழ்திறன் மற்றும் பரிமாணத்தின் வரலாறாக தலைநிமிர்ந்து நிற்கின்றது.

தகதகவென மின்னும் சூரிய அஸ்தமனம், பஞ்சைப் போன்ற மணல், நன்கு இட வசதிகள் கொண்ட அறைகளுடன் பரந்த புல்வெளி, புத்தம்புதிய கடலுணவு வகைகள் ஆகியவற்றைக் கொண்ட EKHO Surf, உண்மையில் வெப்பமண்டலத்திலிருந்து சற்று விலகி, ஓய்வாக பொழுதைப் போக்க இடமளிக்கின்றது.

புதுப்பொலிவுடன், புத்தெழுச்சி

பெந்தோட்டை EKHO Surf இன் மீள் ஆரம்பம் டிசம்பர் 19 அன்று இடம்பெற்ற விசேட பைவத்துடன் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றதுடன், இந்த ஹோட்டல் தனது பழைய விருந்தினர்களையும், புதிதாக வரவுள்ளவர்களையும் மகிழ்வுடன் வரவேற்க தனது கதவுகளை திறந்து வைத்துள்ளது.

வெப்பமண்டலத்திலிருந்து சற்று விலகி மறக்க முடியாத அனுபவங்களை வழங்கும் ஹோட்டலின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் கலவையை மீள் ஆரம்ப கொண்டாட்டம் வழங்கியது.

கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் நீளமான மணல் நிரம்பிய கடற்கரையில், விசாலமான முகப்புடன் போதிய இட வசதி கொண்ட அறைகளுடன், புத்தம்புதிய கடலுணவு வகைள் மற்றும் இதமான விருந்தோம்பல், அதிநவீன வசதிகள் ஆகியவற்றுடன் விருந்தினர்கள் மறக்க முடியாத அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதுடன்,இலங்கையின் அழகிய கடற்கரையின் தனித்துவத்தை சிறப்பாக அனுபவிக்க முடியும்.

பெந்தோட்டை EKHO Surf ஹோட்டலில் முற்பதிவுகளை மேற்கொள்ளவும், மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளவும் 0772387777 / 0117765555 ஆகிய இலக்கங்களை தொடர்பு கொள்ளவும் அலல்து www.ekhohotels.com என்ற இணையத்தளத்தைப் பார்க்கவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right