(நெவில் அன்தனி)
செஞ்சூரியன், சுப்பஸ்போர்ட் பார்க் விளையாட்டரங்கில் 3 நாட்களுக்குள் நிறைவடைந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்களால் தென் ஆபிரிக்கா மிக இலகுவாக வெற்றியீட்டியது.
கெகிசோ ரபாடா, அறிமுக வீரர் நண்ட்ரே பேர்கர் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், டீன் எல்கர், மற்றொரு அறிமுக வீரர் டேவிட் பெடிங்ஹாம் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டம், மாக்கோ ஜென்சனின் சகலதுறை ஆட்டம் என்பன தென் ஆபிரிக்காவை இன்னிங்ஸால் வெற்றி அடையச் செய்தன.
இந்த வெற்றியுடன் 2 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் தென் ஆபிரிக்கா 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலையில் இருப்பதுடன் 12 வெற்றிப் புள்ளிகளைப் பெற்றுள்ளது.
முதல் இன்னிங்ஸ் நிறைவில் தென் ஆபிரிக்காவைவிட 163 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பின்னிலையில் இருந்த இந்தியா, அதன் இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இன்னிங்ஸால் படுதோல்வி அடைந்தது.
இந்தியாவின் 2ஆவது இன்னிங்ஸில் விராத் கோஹ்லி, ஷுப்மான் கில் ஆகிய இருவரே 25 ஓட்டங்களுக்குமேல் பெற்றனர்.
முதல் இரண்டு விக்கெட்கள் (ரோஹித் ஷர்மா 0, யஷஸ்வி ஜய்ஸ்வால் 5) வீழ்ந்போது இந்தியா 13 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.
அதன் பின்னர் ஷுப்மான் கில், விராத் கோஹ்லி ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறிய அளவில் நல்ல நிலைக்கு இட்டுச் செல்ல முயற்சித்தனர். இதுவே இந்தியாவின் 2ஆவது இன்னிங்ஸில் அதிசிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.
ஆனால், கில் 26 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்த பின்னர் இந்தியாவின் எஞ்சிய 7 விக்கெட்கள் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.
விராத் கோஹ்லி மாத்திரமே துணிச்சலுடன் துடுப்பெடுத்தாடி 82 பந்துகளில் 12 பவுண்டறிகள், ஒரு பவுண்டறி உட்பட 76 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டம் இழந்தார்.
பந்துவீச்சில் நண்ட்ரே பேர்கர் 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மாக்கோ ஜென்சன் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கெகிசோ ரபாடா 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
போட்டியின் 3ஆம் நாளான இன்று தனது முதலாவது இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 256 ஒட்டங்களிலிருந்து தொடர்ந்த தென் ஆபிரிக்கா, டீன் எல்கர், மாக்கோ ஜென்சன் ஆகிய இருவரது அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் 408 ஓட்டங்களைக் குவித்தது.
டீன் எல்கர் 287 பந்துகளை எதிர்கொண்டு 28 பவுண்டறிகளுடன் 185 ஓட்டங்களைக் குவித்தார்.
அத்துடன் மாக்கோ ஜென்சனுடன் 6ஆவது விக்கெட்டில் எல்கர் பகிர்ந்த 111 ஓட்டங்கள் தென் ஆபிரிக்காவை பலமான நிலையில் இட்டது.
மாக்கோ ஜென்சன் 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 84 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். 12ஆவது டெஸ்டில் விளையாடிய ஜென்சன், ஓர் இன்னிங்ஸில் பெற்ற அதிகூடிய எண்ணிக்கை இதுவாகும்.
பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 69 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மொஹமத் சிராஜ் 91 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இந்தியா அதன் முதல் இன்னிங்ஸில் 245 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இந்தப் போட்டியில் தனது 14ஆவது டெஸ்ட் சதத்தைக் குவித்த டீன் எல்கர் ஆட்டநாயகனானார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM