நாட்டில் 22 சதவீத குடும்பங்கள் பாரிய கடன் சுமைக்குள் - தொகைமதிப்பு புள்ளிவிபரவியல் திணைக்களம்

Published By: Vishnu

29 Dec, 2023 | 07:51 AM
image

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் வருமானத்தை இழந்துள்ள குடும்பங்கள் கடன் பெறுவதையும்,நகைகளை அடகு வைப்பதையும் , பிறரிடம் உணவு அல்லது பொருட்களை பெற்றுக்கொள்வதையும் மாற்று நடவடிக்கையாக கொண்டுள்ளனர்.

22 சதவீதமான குடும்பங்கள் கடனாளியாகி அதனால் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் சமூக கட்டமைப்பின் நிலைவரம் தொடர்பில் புள்ளிவிபரத் திணைக்களம் மேற்கொண்ட புதிய ஆய்வில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள மொத்த சனத்தொகையில் 60.5 சதவீதமான குடும்பங்களின் மாத வருமானம் குறைவடைந்துள்ளதுடன்,91 சதவீதமான குடும்பங்களின் மாத வருமானம் சடுதியாக உயர்வடைந்துள்ளன.

நடைமுறையில் 3.4 சதவீதமான குடும்பங்களின் மாத வருமானம் உயர்வடைந்துள்ளதுடன்,36.6 சதவீதமான குடும்பங்களின் மாத வருமானத்தில் எவ்விதமான முன்னேற்றத்தன்மையும் இல்லாத நிலை காணப்படுகிறது.

வருமானத்தை இழந்துள்ள 73.6 சதவீதமான குடும்பங்கள் வாழ்வாதாரத்துக்காக மாற்று நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை. 06 சதவீதமான குடும்பங்கள் மாத்திரமே மேலதிக வருமானத்தை திரட்டிக் கொள்வதற்கு மாற்று நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

 வருமானம் குறைந்துள்ள குடும்பங்கள்  கடன் பெறுதல்,தங்க நகைகளை அடகு வைத்தல் அல்லது பிற தரப்பினரிடம் உணவு மற்றும் பணம் பெற்றுக்கொள்வதையும் மாற்று நடவடிக்கைகளாக கொண்டுள்ளனர்.

மொத்த சனத்தொகையில் 22 சதவீதமான குடும்பங்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கடனாளியாகி அதனால் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளார்கள்.பொருளாதார பாதிப்பினால் 14.2 சதவீதமான நபர்கள் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளனர்.இதில் ஆண்களே அதிகளவில் உள்ளடங்குகின்றனர்.

பொருளாதார பாதிப்பு கல்வித்துறைக்கும் தாக்கம் செலுத்தியுள்ளது. 3 முதல் 21 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 54.9 சதவீதமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மாணவர்களில் 53.2 சதவீதமானோர் கற்றல் நடவடிக்கைகளுக்கான செலவுகளை குறைத்துக் கொண்டுள்ளதுடன், பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதையும் தவிர்த்துக் கொண்டுள்ளனர்.அத்துடன் 44 சதவீதமானவர்கள் சீறுனை கொள்வனவையும் தவிர்த்துக் கொண்டுள்ளனர்.

 2023 மார்ச் மாதத்துக்கு பின்னர் மொத்த சனத்தொகையில் 29 சதவீதமானோர் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.நோயாளிகளில் 35 சதவீதமானோர் சிகிச்சை முறைமையை மாற்றிக் கொண்டுள்ளார்கள்.33.9 சதவீதமானோர் நோய் நிலைமை தீவிரமடைந்ததன் பின்னர் சிகிச்சை பெற்றுக்கொண்டுள்ளனர்.பணப் பற்றாக்குறையால் சிகிச்சை முறைமையை மாற்றிக் கொண்டுள்ளதாக நோயாளிகள் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை...

2024-09-07 18:28:56
news-image

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றிபெற்று தமிழர்களின்...

2024-09-07 22:59:45
news-image

அநுர கூறுவதைப் போன்று சிங்கள மக்களின் ...

2024-09-07 18:22:22
news-image

மாகாண சபை முறைமையை மீண்டும் பலப்படுத்தி...

2024-09-07 22:26:01
news-image

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடேன் - பா.அரியநேத்திரன்

2024-09-07 14:22:14
news-image

கடந்து வந்த பாதையை ஜனாதிபதி மறந்துவிட்டார்...

2024-09-07 18:17:06
news-image

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்...

2024-09-07 17:30:15
news-image

கருத்துச் சுதந்திரம் பாதிப்பற்ற வகையில் கண்காணிக்கப்பட...

2024-09-07 18:12:30
news-image

சிலாபம் - புத்தளம் வீதியில் விபத்து;...

2024-09-07 18:25:56
news-image

ராஜபக்சர்கள் சீரழித்த நாட்டை மீண்டும் ரணில்,...

2024-09-07 21:53:36
news-image

கல்முனையில் யானையால் தாக்கப்பட்டு யாசகர் பலி

2024-09-07 17:57:54
news-image

பொத்துவில் பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2024-09-07 17:35:27