நீர்கொழும்பு பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் நபரொருவரை கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்புப் பிரதேசத்திலுள்ள பொது இடமொன்றில் வைத்து  4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நீர்கொழும்பு பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சாவும் கைதுசெய்யப்பட்ட நபரும் மேலதிக விசாரணைக்காக நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.