எண்டோஸ்கோப்பி மூலம் சமிபாட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு!

27 Dec, 2023 | 06:56 PM
image

உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுவது அவமானம் என்று நினைத்த ஒரு காலம் உண்டு. ஆனால் இன்றோ, அன்றாட உணவையே உணவகங்களுக்குச் சென்றோ அல்லது உணவகங்களில் இருந்து தருவித்தோ சாப்பிடுவதை வழக்கமாகவே ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் முன்னெப்போதும் இல்லாத வகையில், இன்று இத்தனை உணவகங்கள் கடை விரிக்கத் தொடங்கியிருக்கின்றன. 

போதாக்குறைக்கு, வீதி உணவுகள் என்ற பெயரிலும் குட்டிக் குட்டி உணவகங்கள். இதனாலேயே, எதைச் சாப்பிடுகிறோம், எதற்காகச் சாப்பிடுகிறோம் என்ற நினைப்பே இல்லாமல், குப்பைத் தொட்டியில் குப்பையைக் கொட்டுவதைப் போல, வயிற்றுக்குள் கண்டதையும் கொட்டி வயிற்றை நிறைக்க ஆரம்பித்திருக்கிறோம்.

வயிற்றில் உள்ள தசைகள் சுருங்கி, விரிந்து உணவைக் கடைய வேண்டுமென்றால் வயிற்றில் வெற்றிடம் ஒன்று இருக்க வேண்டும். அதேவேளை, சாப்பிடுபவரின் உடல் நலத்தை ஒட்டியும் சாப்பிடும் உணவின் தன்மையைப் பொருத்தும் நபருக்கு நபர் உணவை சமிபாடடைய வயிறு எடுத்துக்கொள்ளும் நேரம் மாறுபடும். இதனால்தான் இரண்டு வேளை உணவுக்கு இடையில் போதுமான இடைவெளி இருக்க வேண்டும் என்றும் இரண்டு வேளை உணவுக்கு இடையில் நொறுக்குத் தீனி சாப்பிட வேண்டாம் என்றும் அவ்வப்போது உண்ணாவிரதம் இருந்து வயிற்றுக்கு ஓய்வு தருவது நல்லது என்றும் வலியுறுத்தப்படுகிறது.

சமிபாட்டுத் தொகுதியில் பாதிப்பு ஏதும் ஏற்பட்டால், உணவு விழுங்குவதில் சிரமம், எடை குறைதல், பசியின்மை, மஞ்சள் காமாலை, இரத்த வாந்தி, மலத்தில் இரத்தம், கால் வீக்கம், வயிற்றில் வீக்கம், கட்டி போன்ற அறிகுறிகளைக் கொண்டு கண்டறியலாம்.

ஒருவேளை, சமிபாட்டுத் தொகுதியில் ஏதும் பாதிப்புகள், குறிப்பாக புற்றுநோய் பாதிப்பு - ஏற்பட்டிருந்தால், நவீன வைத்திய முறைகளான அல்ட்ரா சௌண்ட் ஸ்கேன், எண்டோஸ்கோப்பி மூலம் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க முடியும்.

ஏனைய உடல் உள்ளுறுப்புகளுக்கு உதவுவதைப் போலவே, சமிபாட்டுத் தொகுதிப் பிரச்சினைக்கும் எண்டோஸ்கோப்பி மூலம் தீர்வு காண முடியும். அஜீரணம், வாந்தி-பேதி, குடல் புண், ரத்தக் கசிவு, உணவுக் குழாய் அடைப்பு, உணவுக் குழாய் புற்றுநோய், குடல் புற்றுநோய், குடலில் ஓட்டை, கணையத்தில் புற்றுநோய், பித்தக் குழாய் அடைப்பு, பித்தக் குழாய் கற்கள், மூல நோய், ‘அபாடஸ் ஹேர்னியா’ போன்ற பிரச்சினைகளை எண்டோஸ்கோப்பி பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியும்.

அது மட்டுமன்றி, பித்தக் குழாய் அடைப்பு மற்றும் மஞ்சள் காமாலையைக் கூட எண்டோஸ்கோப்பி மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும். 

எனவே, மேற்படி அறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கும் இருந்தால், உடனடியாக ஒரு வைத்தியரை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது.

- சத்யா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்சுலின் செலுத்திக்கொள்வதால் பக்க விளைவு உண்டாகுமா?

2025-03-25 15:50:06
news-image

பிளஸன்டா அக்ரிடா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-03-22 16:55:55
news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15
news-image

டெம்போரோமாண்டிபுலர் ஜாயிண்ட் டிஸ்பங்சன் என காதில்...

2025-03-11 17:36:18