(எம்.நியூட்டன்)
சிறிய, நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும் விற்பனையும் இன்று புதன்கிழமை (27) யாழ்ப்பாணம் மத்திய கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது.
இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான வர்த்தக கண்காட்சியை யாழ். இந்திய துணை தூதுவர் இராகேஷ் நட்ராஜ், யாழ். வர்த்தக சங்க தலைவர் ஜெயசேகரம், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு பிரதிநிதி யாழ். பிரதேச செயலாளர் சுதர்சன் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் இணைந்து திறந்துவைத்தார்கள்.
இந்திய துணைத் தூதரகம், நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுக் கலைக்கூடல் மற்றும் யாழ். வணிகர் கழகம் இணைந்து இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன.
இதில் காலை முதல் வர்த்தக கண்காட்சியும் மாலை 4.45 மணி முதல் இரவு 9.15 மணி வரை மார்கழி இசைவிழா நிகழ்வுகளும் நடைபெறும்.
இந்நிகழ்வில் புகழ்பூத்த இலங்கை கலைஞர்கள், இந்திய கலைஞர்கள் பங்குபற்றவுள்ளார்கள்.
மேலும், தவில், நாதஸ்வர இசைச்சங்கமம், விரலோசை வயலின் கச்சேரி, நாத சங்கமம், விரலிசை கானம், நாட்டிய நாடகம், இந்திய கலைஞர்களின் பரதநாட்டிய நடன நிகழ்ச்சி, நாட்டுக்கூத்து போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
அதேவேளை, மண்டபத்தின் வெளிப்புறத்திடலில் சுமார் 140 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டு, வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த சிறிய, நடுத்தர உள்ளூர் உற்பத்தியாளர்களின் தரம் வாய்ந்த உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, இந்த கண்காட்சி, விற்பனை ஊடாக உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான வெளிநாட்டு சந்தைவாய்ப்பும் அமையக்கூடிய சூழல் காணப்படுகிறது.
இது வட மாகாணத்தைச் சேர்ந்த உற்பத்தியாளர்களின் மாபெரும் கண்காட்சியாக அமைகிறது. இந்த இரு நிகழ்வுகளுக்கான பிரவேசம் இலவசமானது.
மேலும், வட மாகாண மக்களின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கும் இசை நிகழ்வுகள் மூலம் வட மாகாண உள்ளூர் உற்பத்தி மேம்படுத்தப்படுவதனால் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்யும் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க முடியும்.
மேலும், இந்த கண்காட்சியும் விற்பனை நடவடிக்கைகளும் 27, 28, 29ஆம் திகதிகளாகிய மூன்று நாட்களும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM