விவசாயப் பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தினை இரத்துச் செய்யுமாறு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published By: Vishnu

27 Dec, 2023 | 04:36 PM
image

கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு பிரதி (விரிவாக்கல்) விவசாயப்பணிப்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தினை இரத்துச் செய்யுமாறு கோரி புதன்கிழமை (27) மட்டக்களப்பில் அமைந்துள்ள அவ் அலுவலகத்திற்கு முன்னால் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு பிரதி (விரிவாக்கல்) விவசாயப்பணிப்பாளராக முன்னர் கடமையாற்றிய மு.பரமேஸ்வரன் மீண்டும் மட்டக்களப்பில் கடமை ஏற்பதை எதிர்க்கிறோம் என்ற தலைப்பிட்ட பதாதையை தாங்கியவாறு விவசாயிகள் கவனஈர்ப்பில் ஈடுபட்டனர். இதன்போது தற்போது கடமையிலுள்ள பிரதி விவசாயப்பணிப்பாளரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கவனஈர்ப்பின் இறுதியில் கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கு வழங்குவதற்கான கடிதம் ஒன்றைiயும் பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தில் கையளித்தனர்.

ஏற்கனவே கடமையாற்றி வரும் பிரதி விவசாயப் பணிப்பாளர் மேற்கொண்ட திட்டங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும், அதனால் தங்களது விவசாயங்கள் பாதிப்படையும், எனவும், புதிதாக நியமனம் வழங்கப்பட்டவர் முன்னர் கடமையாற்றி பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இடமாற்றம் வழங்கப்பட்டவர், விவசாயம் பாதிக்கப்படும் நிலை உருவானால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1700 ரூபா...

2024-07-15 16:54:18
news-image

இரு சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்த போலி...

2024-07-15 16:58:01
news-image

ஆனமடுவ ஜயசூரிய மகா வித்தியாலய மாணவர்களின்...

2024-07-15 16:54:46
news-image

இனப்பிரச்சினைக்கு அனைத்து இனக்குழுவினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை...

2024-07-15 16:39:26
news-image

சம்பிரதாய அரசியலில் இருந்து விலகி, நாட்டைப்...

2024-07-15 17:07:31
news-image

உள்ளக நீர்வழிகள் மூலம் பொருட்கள் மற்றும்...

2024-07-15 17:01:04
news-image

30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2024-07-15 16:41:29
news-image

தம்புள்ளையில் லொறி - வேன் மோதி...

2024-07-15 16:32:05
news-image

காணியின் உரிமையும் எழுத்துமூல அனுமதியின்றியும் காணியை...

2024-07-15 17:09:00
news-image

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி...

2024-07-15 16:40:09
news-image

மின்கட்டணத்தை குறைக்க அனுமதி - இலங்கை...

2024-07-15 15:57:49
news-image

மன்னார் கருங்கண்டல் பாடசாலையில் இலத்திரனியல் வகுப்பறை...

2024-07-15 15:59:16