விஜய் '68’ படத்தில் இணைந்த பிரபல நடிகை!

27 Dec, 2023 | 03:08 PM
image

நடிகர் விஜய், லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68 வது படமான இதை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், மோகன் சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் நடிக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.

சென்னை, தாய்லாந்து, ஹைதராபாத் என பல இடங்களில் காட்சிகளை படமாக்கி வருகின்றனர் படக்குழுவினர். அடுத்து துருக்கியில் படிப்படிப்பு நடைபெற இருக்கிறது. 

இந்நிலையில், இந்த படத்தில் நாளுக்கு நாள் நட்சத்திரங்கள் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்தபடத்தில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் விஜய்யின் 68 வது படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இதற்கு முன்னர் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right