யாழ்.போதனாவில் டெங்கினால் இளைஞன் உயிரிழப்பு ; 71 பேர் சிகிச்சைக்காக அனுமதி

27 Dec, 2023 | 03:23 PM
image

டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். 

டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில், அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், மூளை சாவடைந்திருந்தார். 

தொடர்ந்து இளைஞனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை  (27) காலை உயிரிழந்துள்ளார். 

அதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையில், நேற்று  செவ்வாய்க்கிழமை (26) மாத்திரம் 71 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஏற்கனவே டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு காரணமாக இரண்டு விடுதிகள் புதிதாக திறக்கப்பட்டுள்ளதுடன், குழந்தை நோயாளர் விடுதி நிரம்பி உள்ளது என வைத்தியசாலை பணிப்பளார் தெரிவித்துள்ளார். 

கடந்த திங்கட்கிழமை 11 மாத குழந்தை ஒன்று டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்து இருந்ததுடன், கடந்த சனிக்கிழமை டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு வழங்கப்பட்ட மருந்து ஒவ்வாமை ஏற்பட்டமையால் மாணவி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகின் மிக நீண்ட தொடு உணர்...

2026-05-16 16:20:08
news-image

UPDATE ; வனவாசல ரயில் விபத்து...

2026-05-16 16:13:27
news-image

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது ; அந்த...

2026-05-16 15:09:07
news-image

களுத்துறையில் 600 போதை மாத்திரைகளுடன் ஒருவர்...

2026-05-16 14:52:18
news-image

ரம்பேவ பகுதியில் விநியோகிக்கப்பட்ட MOP உரத்தின்...

2026-05-16 14:58:43
news-image

மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு

2026-05-16 15:19:02
news-image

காலி கோட்டை அமைதிப் போராட்டம் :...

2026-05-16 14:48:58
news-image

வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு தற்காலிகமானது...

2026-05-16 14:43:20
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால்...

2026-05-16 13:42:23
news-image

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்துக்காக மனப்பாங்கு ரீதியாகவும்...

2026-05-16 13:11:49
news-image

சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு

2026-05-16 12:59:04
news-image

ரயில் விபத்து : தண்டவாள ஆணிகளை...

2026-05-16 12:46:55