ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிற்கு கட்சி பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் குறித்த பத்து கேள்விகள் அடங்கிய கேள்விக்கொத்தினை தயாரித்துள்ளது என பினான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன முன்வைத்துள்ள நிபந்தனைகளை கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என குறிப்பிட்டுள்ள எவ்டி இதுவரை தம்மிக பெரேரா குறித்த ஊகங்களே வெளியாகியுள்ளன எனினும் வேறு சில வேட்பாளர்கள் குறித்து ஆராய்வதாக கட்சியின் பொதுச்செயலாளர் கடந்த வாரம் தெரிவித்துள்ளார் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.
பத்து கேள்விகளிற்கான பதில்களை அடிப்படையாக வைத்து வேட்பாளரை கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவு செய்வார் என தெரிவித்துள்ள எவ்டி இந்த பத்து நிபந்தனைகள் அல்லது கேள்விகள் அரசியல் கூட்டணிகளை உருவாக்குவதற்கான அவர்களின் திறம் மற்றும் தேர்தலில் அதிக ஆதரவை பெறுவதற்கான திறம் குறித்ததாகவும் காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளது.
வட்வரியை குறைப்பதற்கான திட்டங்கள் அரசாங்கத்தின் வருமானத்தினை அதிகரிப்பதற்கான மாற்று திட்டங்கள் 7 வீத பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் நல்லாட்சிக்கான திட்டங்கள் குறித்த கேள்விகளையும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தயாரித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM