(இராஜதுரை ஹஷான்)
ராஜபக்ஷர்களின் வரி குறைப்பு கொள்கையை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் கோட்டபய ராஜபக்ஷ மூர்க்கத்தனமான முறையில் சீனிக்கான வரியை குறைத்ததால் 1600 கோடி ரூபா வரி வருமானத்தை அரசாங்கம் இழந்துள்ளது.
பிணைமுறி மோசடியை காட்டிலும் சீனி வரிக்குறைப்பு மோசடி பாரதூரமானது. ஆகவே வரி விவகாரம் தொடர்பில் அறிக்கை விடுவதை மஹிந்த ராஜபக்ஷ தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நாவல பகுதியில் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
வரி அதிகரிப்பு தனது கொள்கையல்ல, வரி குறைப்பு பொருளாதார கொள்கையில் ஒன்றாக காணப்படுகிறது. ஆகவே வரி அதிகரிப்புக்கு தான் எதிர்ப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆனால் பாராளுமன்றத்தில் கடந்த 11 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட சேர்பெறுமதி (வற்) வரி சட்டமூலத்துக்கு அவர் ஆதரவாக வாக்களித்தார்.
ஒட்டுமொத்த மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் வற் வரியை அதிகரிக்கும் தீர்மானத்துக்கு பாராளுமன்றத்துக்குள் ஆதரவு வழங்கி விட்டு, நாட்டு மக்கள் மத்தியில் வரி குறைப்புக்கு நாங்கள் எதிர்ப்பு என ராஜபக்ஷர்கள் நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள்.
ராஜபக்ஷர்களின் வரி குறைப்பு கொள்கையை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தவுடன் சீனிக்கான வரியை 50 ரூபாவில் இருந்து 25 சதவீத குறைத்தார்.இதன் பயனை நாட்டு மக்கள் எவரும் பெறவில்லை.
ராஜபக்ஷர்களின் செல்வந்த சகாக்கள் 1600 கோடி ரூபா இலாபமடைந்தார்கள்.பிணைமுறி மோசடியை விட சீனிக்கான வரி குறைப்பு மோசடி பாரதூரமானது.
தேசியத்தையும், தேசிய உற்பத்திகளையும் பாதுகாப்பது தமது கட்சியின் கொள்கை என்று மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்கள். ஆங்கிலேயர்களின் ஆட்சியில் கூட இலங்கையின் சுதேச உற்பத்திகள் இல்லாதொழிக்கப்படவில்லை.
ஆனால் கோட்டபய ராஜபக்ஷ எவ்விதமான தூரநோக்கு சிந்தனையும் இல்லாமல் சேதன பசளை திட்டத்தை அறிமுகம் செய்து முழு விவசாயத்துறையை இல்லாதொழித்தார்.
பொருளாதார பாதிப்புக்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்கள் குறிப்பிட முடியாது ஏனெனில் ராஜபக்ஷர்கள் பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது.
ஆகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை போன்று மஹிந்த ராஜபக்ஷவும் அமைதியாக விலகிக் கொள்ள வேண்டும்.
பொருளாதார முகாமைத்துவத்தில் ராஜபக்ஷர்கள் எடுத்த மூர்க்கத்தனமான தீர்மானங்களினால் கடந்த மூன்று ஆண்டு காலப்பகுதியில் மாத்திரம் ஒவ்வொரு தனிநபரும் ஏதாவதொரு வழிமுறையில் ஒரு இலட்சம் ரூபா வருமானத்தை இழந்துள்ளனர்.
அத்துடன் ஒரு இலட்சம் ரூபா பொருள் மற்றும் சேவைத்துறையில் வரியாக செலுத்தியுள்ளனர். இதற்கு ராஜபக்ஷர்கள் பொறுப்புக் கூற வேண்டும்.
கோட்டபய ராஜபக்ஷ பயணித்த பாதையில் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணிக்கிறார்.வரி செலுத்தாமல் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
மதுவரித் திணைக்களம், தேசிய இறைவரித் திணைக்களம் மற்றும் சுங்கத்திணைக்களம் சுமார் 1000 பில்லியன் ரூபா வரை வரி வருமானத்தை அறவிடவில்லை.முறையாக வரி அறவிட்டால் மக்களை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டிய தேவை ஏற்படாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM