மன்னார்- யாழ் பிரதான வீதியில் பயணிகள் பஸ் மோதி 8 மாடுகள் பலி : பல மாடுகள் படுகாயம்

26 Dec, 2023 | 08:13 AM
image

மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதி  நாயாத்துவழி  பகுதியில் திங்கட்கிழமை (25) மாலை இடம்பெற்ற விபத்தில் 8 மாடுகள் உயிரிழந்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன்  அதி வேகமாக பயணித்த  தனியார் பஸ் ஒன்றே நாயாத்து வழி  பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த மாடுகளின் மீது மோதியுள்ளது.

குறித்த விபத்தில் கூட்டமாக சென்ற மாடுகளில் 8 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு பல மாடுகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளது.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாலம்பன் கிராமத்தைச் சேர்ந்த பண்ணையாளர்களின் மாடுகள் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் மாடுகளை அடைக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

பயணிகளுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து அதி வேகமாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து குறித்த மாடுகளின் மீது மோதிய நிலையில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தனியார் பேருந்து சாரதியின் கவனயீனமே குறித்த விபத்திற்கு காரணம் எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு வருகை தந்த அடம்பன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாழைச்சேனை - ஓமனியாமடுவில் கைக்குண்டு மீட்பு

2025-02-12 15:22:06
news-image

வளிமாசடைவால் கர்ப்பிணிகளின் கருவுக்கு ஆபத்து -...

2025-02-12 15:06:58
news-image

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து இளைஞன்...

2025-02-12 15:19:05
news-image

இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பேசிய...

2025-02-12 14:49:15
news-image

தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த பொலிஸ்...

2025-02-12 14:48:47
news-image

யாழ். தையிட்டியில் தொடரும் இரண்டாம் நாள்...

2025-02-12 14:19:21
news-image

அடுத்த சில நாட்களுக்கு பகலில் வெப்பமும்,...

2025-02-12 14:21:46
news-image

வர்த்தகம், சந்தையை பன்முகப்படுத்தல் குறித்து ஜனாதிபதி...

2025-02-12 13:23:46
news-image

கார் - வேன் மோதி விபத்து...

2025-02-12 13:04:52
news-image

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் தோல்வி

2025-02-12 14:22:43
news-image

உலக அரச உச்சி மாநாட்டில் இன்று...

2025-02-12 13:10:44
news-image

யாழ்ப்பாணத்தில் மருத்துவ எரியூட்டியால் தமக்கு பாதிப்பு...

2025-02-12 13:10:15