கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, ஒடிசாவின் பூரி கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கிறிஸ்துமஸ் தாத்தா உருவ மணற்சிற்பம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். பிரபல மணற்சிற்ப கலைஞரான இவர், ஒவ்வொரு முக்கிய நிகழ்வின்போதும் ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணற்சிற்பம் அமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலைடில், இன்று (டிச. 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பூரி கடற்கரையில் 2,000 கிலோ வெங்காயம் மற்றும் மணலைக் கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா மணற்சிற்பத்தை அவர் உருவாக்கியுள்ளார். இது, பார்வையாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
இதுகுறித்து சுதர்சன் பட்நாயக் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பூரி கடற்கரையில் சில வித்தியாசமான சிற்பங்களை உருவாக்குகிறோம்.
அந்த வகையில் இந்த ஆண்டு, 2,000 கிலோ வெங்காயம் மற்றும் மணலைக் காெண்டு, 100 அடி நீளம், 20 அடி உயரம் மற்றும் 40 அடி அகலம் கொண்ட உலகின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தை உருவாக்கியுள்ளோம். மேலும், ‘மரக்கன்றை பரிசளிப்பீர்; பூமியை பசுமையாக்குவீர்' என்ற செய்தியை இதன் மூலம் உலகக்கு உணர்த்துகிறோம்” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM