திருவெம்பாவையை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபையினால் முன்னெடுக்கப்படும் வருடாந்த பாத யாத்திரை 11வது வருடமாக இவ்வருடமும் காரைநகர் ஈழத்து சிதம்பரம் நோக்கி ஆன்மீக எழுச்சியுடன் நேற்று (24) இடம்பெற்றது.
நேற்று காலை 7 மணியளவில் மாதகல் சம்பில்தறை சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தில் ஆரம்பமான பாதயாத்திரையில் பக்தர்கள் பல ஆலயங்களையும் தரிசித்த வண்ணம் சிவநாமங்களை உச்சரித்த வண்ணம் பொன்னாலை சந்தியினை சென்றடைந்தனர்.
பாதயாத்திரையின்போது பொன்னாலை நாராயணன் தாகசாந்தி நிலையத்தினால் சிவனடியார்களுக்கான அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ச்சியாக காரைநகர் ஆலயங்களை தரிசித்தவாறு காரைநகர் ஈழத்து சிதம்பரத்தை நேற்று மாலை சென்றடைந்து, அடியார்கள் திருவெம்பாவை பூஜையில் கலந்துகொண்டனர்.
பாதயாத்திரை இடம்பெற்ற வழித்தடத்தில் பொதுமக்கள் பூரண கும்பம் வைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதன்போது அகில இலங்கை சைவ மகா சபையினர், சிவ தொண்டர்கள், சிவ மங்கையர்கள், சிவனடியார்கள் என பலரும் கலந்துகொண்டனர்.-
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM