இலங்கை கிரிக்கெட் அணி விரர்களான அசேல குணரத்ன மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் இராணுவ உடையில் இருக்கும் புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கெதிரான கிரிக்கெட் தொடர்களில்  அசேல குணரத்ன மற்றும் சீக்குகே பிரசன்ன சிறப்பாக செயற்பட்டிருந்தனர்.

இதனடிப்படையில் குறித்த இருவருக்கும் இராணுவத்தால் பதவி உயர்வுகள் இன்று வழங்கப்பட்டன.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றன.