அன்பு, மனிதாபிமானம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம் என மனித வாழ்க்கைக்குத் தேவையான பல நல்ல ஒழுக்கங்களைக் கற்றுத் தந்த இயேசு பிரானின் பிறந்த நாளைக் கிறிஸ்மஸ் தினமாக கொண்டாடி மகிழும் அனைத்து கிறிஸ்துவ சமூகத்தினருக்கும் கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.கா. தலைவருமான செந்தில் தொண்டமான் நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாவ வாழ்விலிருந்து மனிதனை மீட்கவே இறைமகன் இயேசு பாலகன் மனித உருவெடுத்தார். அன்புக்கு இருக்கும் மகத்தான சக்தியை உணர்த்தவே இவ்வுலகில் இயேசு பிரான் அவதரித்தார்.
இந்த நன்னாளில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கருணைகாட்டி இன நல்லுறவுடன் கூடிய சுபீட்சமான நல்வாழ்வை எதிர்கொள்ள வேண்டும்.
உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களும் சகோதரத்துவத்துடன் அன்பு காட்டுபவர்களாகவும், இயேசுவின் போதனைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.
ஒவ்வொருவரினதும் உள்ளத்திலே உண்மையான இறையன்பு, சகோதரத்துவம், அமைதி மற்றும் சுபீட்சம் என்பன அவர்களை இயல்பாகவே ஆட்கொண்டிருக்கிறது. எனவே ஒவ்வொருவரினதும் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் நிறைவேற இந்நாள் அனைவருக்கும் ஒரு பொன்னாளாக அமையட்டும்.
இயேசு பிரானின் போதனைகளை நினைவுகூர்ந்து அனைவரும் கிறிஸ்மஸை நல்லிணக்கத்தோடும், புரிந்துணர்வோடும் கொண்டாடி மகிழ எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM