யாழ் கடற்பிரதேசத்தில் 4 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு - கடற்படை

25 Dec, 2023 | 08:29 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

யாழ்ப்பாணம்  கடற்கரைக்கு  அண்மித்த பகுதியில்  இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது  35 கிலோவுக்கும் அதிகமான 14 மில்லியன் பெறுமதியான  கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கடல் வழிகள் ஊடாக இடம்பெறும் சட்டவிரோத  செயற்பாடுகளை தடுக்கும் நோக்கில் கடற்படையினர் நாட்டின் கரையோர மற்றும் கடற்பரப்புகளில் 24 மணிநேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக  வடக்கு கடற்படையினர் யாழ். வெத்திலகேணி கடற்கரை பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் கரை ஒதுங்கிய சாக்கு மூட்டையை சோதனைக்கு உட்படுத்திய போது 16 சாக்கு பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 35 கிலோ 100 கிராம்  கேரள கஞ்சாவை  மீட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் கடற்படையின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக கேரள கஞ்சாவை நாட்டிற்கு கொண்டு வர முடியாமல் கடத்தல்காரர்கள்  விட்டுச் சென்றிருக்கலாம் எனவும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 14 மில்லியன் ரூபா எனவும் கடற்படை தெரிவித்துள்ளது. மேலதிக நடவடிக்கைகளை இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்