மன்னாரில் நான்கு வலம்புரிச் சங்குகளுடன் ஒருவர் கைது!

Published By: Vishnu

26 Dec, 2023 | 11:03 AM
image

மன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு வலம்புரி சங்கு களுடன் நபர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) இரவு மன்னார் பொலிஸ்  குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் சாந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் எனவும் அவர் குறித்த நான்கு வலம்புரிச் சங்குகளையும் விற்பனை செய்யும் நோக்கில் வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த நபர் வலம்புரி சங்குகளை வைத்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்   சாந்திபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் இருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நான்கு வலம்புரி சங்குகளை மன்னார் பொலிஸ் விசேட  பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன . 

சந்தேக நபர் மற்றும் மீட்கப்பட்ட நான்கு வலம்புரி சங்கு களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளது. மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரிக்குறைப்பு செய்தால் பொருளாதாரம் பலவீனமடையும் -...

2024-05-21 17:05:42
news-image

தனியாகவும், கூட்டாகவும் மீள ஆராய்வதற்கு ஜனநாயக...

2024-05-21 22:13:42
news-image

ஊழலுக்கு எதிரான பொறிமுறையைக் கட்டியெழுப்ப வேண்டும்...

2024-05-21 16:28:15
news-image

'நிதியியல் அறிவு வழிகாட்டி' வெளியீடு -...

2024-05-21 15:34:05
news-image

புத்தளம் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் நாளை...

2024-05-21 19:54:33
news-image

காலி மாவட்டத்தின் கருத்துக்களைப் பெற 3...

2024-05-21 17:44:35
news-image

ஈரான் ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள...

2024-05-21 19:12:25
news-image

ஜனாதிபதி ரணில் அடுத்த மாதம் முக்கிய...

2024-05-21 15:32:47
news-image

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஒத்துழைப்பை ஆராய தாய்லாந்து...

2024-05-21 17:43:14
news-image

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில்...

2024-05-21 18:25:12
news-image

இந்தியாவில் எந்த அரசாங்கம் வரினும் இணைந்து...

2024-05-21 18:20:09
news-image

யானை - மனித மோதலைக் கட்டுப்படுத்த...

2024-05-21 17:16:31