சிரியாவிலுள்ள தீவிரவாத அமைப்பினருக்கு தகவல்களை தொலைபேசி குறுஞ்செய்தியூடாக அனுப்பிய குற்றத்திற்காக, நான்கு இளம்பெண்களை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.   

பிரான்ஸின் தலைநகரான பாரிஸில், கடந்தாண்டு இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவராக தேடப்பட்டுவரும், ராச்சித் காஸிம் என்பவருக்கு தொலைபேசியூடான குறுஞ்செய்திகள் மூலம் தகவல்களை அனுப்பிய குற்றத்திற்காக ஒரு பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் சிரியாவிலுள்ள தீவிரவாத அமைப்பினருக்கு தகவல்களை அனுப்பி வந்த குற்றத்திற்காக, மேலும் மூன்று பெண்களை பிரான்ஸ் தேசிய புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 

அத்தோடு ஈராக்கிலுள்ள தீவிரவாத அமைப்பினருடன் இணைந்து, பணியாற்றுவதாக அனுமானிக்கப்படும், ராச்சித் காஸிம், கடந்த மாதம் அமெரிக்காவால் நடத்தப்பட்ட தாக்குதலில் இறந்திருக்கலாம் என கருதப்பட்ட நிலையில், அவருடன் தொடர்பு கொண்டதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பெண்களும் 18 வயதுக்குட்பட்டவர்கள் என பிரான்ஸ் காவல் துறை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.