தேர்தல்கள் பொருளாதாரத்தை சீர்செய்யுமா?

Published By: Vishnu

24 Dec, 2023 | 07:05 PM
image

சி.சி.என்

தேர்­தல்­களின் வருடம் என 2024 ஆம் ஆண்டு அழைக்­கப்­பட்­டாலும் தேர்­தல்கள் இடம்­பெ­றுமா என்ற சந்­தே­கங்கள் மக்கள் மத்­தியில் இன்னும் உள்­ளன. முதலில் ஜனா­தி­பதித் தேர்­தலா அல்­லது பாரா­ளு­மன்றத் தேர்­தலா என்ற குழப்பம் மக்கள் மத்­தியில் நில­வு­கின்­றது. அதை விட, தேர்­தல்கள் நாட்டின் பொரு­ளா­தார ஸ்திரத்­தன்­மையை உறு­திப்­ப­டுத்­துமா என்ற கேள்­வியும் எழுந்­துள்­ளது.

கருத்துக் கணிப்­புகள் என்ன கூறி­னாலும் இறுதி நேரத்தில் சில தேசியக் கட்­சி­களின் முடி­வுகள் மக்கள் மனதை மாற்­றக்­கூடும். அடுத்த வருடம் செப்­டெம்பர் மாதத்­துக்குள் ஜனா­தி­பதித் தேர்தல் இடம்­பெ­ற­வேண்டும். அதற்­க­டுத்து பாரா­ளு­மன்றத் தேர்தல், பிறகு, ஒத்தி வைக்­கப்­பட்ட உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்­க­ளையும் நடத்த வேண்­டி­யுள்­ளது.

முதலில் ஜனா­தி­பதித் தேர்தல் இடம்­பெற்றால் அதன் பெறு­பே­றுகள் எந்­த­ள­வுக்கு பொதுத் தேர்­தலில் தாக்கம் செலுத்தும் என்­பதை தற்­போ­தைய அர­சியல் சூழ்­நி­லையில் கூறு­வது கடினம். எனினும் ஜனா­தி­பதி ஒருவர் ஆட்­சி­யி­லி­ருக்கும் போது பாரா­ளு­மன்றத் தேர்தல் இடம்­பெற்றால் அதை வைத்து ஆச­னங்­களைப் பெறலாம் என்­பது சில கட்­சி­களின் கணிப்பு. ஆனால், முதலில் பொதுத்­தேர்தல் இடம்­பெற்றால் பெரும்­பான்­மையை பெறும் கட்­சிகள் அல்­லது கூட்­ட­ணி­களே  ஜனா­தி­ப­தியை தீர்­மா­னிக்கும் சக்­தி­க­ளாக விளங்­கப்­போ­கின்­றன. பரந்­த­ள­வான கருத்துக் கணிப்­புகள் அநுர குமார திசா­நா­யக்­க­வுக்கு சாத­க­மாக இருந்­தாலும் அவர் பெறப்­போகும் வாக்­குகள் ஏனைய கட்­சிகள் மற்றும் ஊழல் அர­சி­யல்­வா­தி­களின்  எதிர்ப்பு வாக்­கு­க­ளா­கவே இருக்கும்.

அதா­வது, ரணில் மற்றும் மஹிந்த தரப்­பி­னரில் அதி­ருப்தி கொண்ட மக்­களே தேசிய மக்கள் சக்­திக்கு வாக்­க­ளிப்­ப­வர்­க­ளாக உள்­ளனர். ஆகவே அவர் எதிர்ப்பு வாக்­கு­களை அறு­வடை செய்­யப்­போகும் ஒரு வேட்­பா­ள­ரா­கவே இருக்­கப்­போ­கின்றார். தேசிய மக்கள் சக்­தியின் தலைவர் அநுர குமா­ரவின் கொள்­கைகள் மற்றும் நாட்டை நெருக்­க­டி­க­ளி­லி­ருந்து மீட்கும் வழி­வ­கைகள் என்­ன­வென்று மக்­க­ளுக்குத் தெரி­யாது. ஏனென்றால் அவை குறித்து அநு­ர­கு­மார ஒன்றும் இது­வரை கூற­வில்லை. தேசியக் கட்­சி­களின் ஊழல்கள், கொள்­ளைகள் பற்றி பாரா­ளு­மன்­றத்தில் விவாதிக்கும் அவர், நாட்டின் பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்­கான மீட்­சி­யாக என்ன செய்­யலாம் என்­பது பற்றி பேசு­கிறார் இல்லை.

மக்கள் ஆத­ரவு கருத்­துக்­க­ணிப்பில் மூன்­றா­வது இடத்­தி­லி­ருக்கும் ரணில், இரண்­டா­வது இடத்­தி­லி­ருக்கும் சஜித்தின் ஐக்­கிய மக்கள் சக்­தி­யோடு இணை­யாமல் தேர்­தல்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க முடி­யாது. வரிசை யுகத்தை முடி­வுக்கு கொண்டு வந்­தவர் என்ற அம்சம் மாத்­திரம் ரணி­லுக்கு வாக்­கு­க­ளையும் பெற்றுத் தந்து விடாது. இன்று வரிசை இல்­லா­மலும் நெருக்­க­டிகள் தொடர்­கின்­றன. அவ­ரது பொரு­ளா­தார கொள்­கை­களின் படி அநு­ர­வோடு கைகோர்க்க முடி­யாது. அதை அநு­ரவும் ஏற்க மாட்டார்.

அதே­வேளை சஜித் தரப்­பினர் பொது­ஜன பெர­மு­னவின் அதி­ருப்­தி­யா­ளர்­களை தம்­பக்கம் இழுத்துப் போடு­வதில் மாத்­தி­ரமே குறி­யாக இருக்­கின்­றனர். ஏனென்றால், அவை பெரும்­பான்மை சிங்­கள பெளத்த வாக்­கு­க­ளோடு சம்­பந்­தப்­பட்­டவை. பாரா­ளு­மன்­றத்தில் ஜனா­தி­ப­தியை ஆத­ரிக்கும் பிர­தான கட்­சி­யாக பொது­ஜன பெர­முன விளங்­கு­கின்­றது. சபையில் ஒரே ஆச­னத்தை கொண்­டி­ருந்­த­வரை ஜனா­தி­ப­தி­யாக்­கி­யதன் மூலம் அக்­கட்சி அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருக்­கின்­றது. சட்­ட­மி­யற்றும் பணி­க­ளுக்கு அது ஆத­ரவை வழங்­கு­கின்­றது. அவ்­வாறு ஆத­ரவை வழங்­கா­விட்டால்   ஜனா­தி­ப­திக்கு பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­பதைத் தவிர வழி­யில்லை. ஆனால், தற்­போ­தைய சூழலில் மொட்டுக் கட்சி அதை விரும்­ப­வில்லை. பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டால் உட­ன­டி­யாக பொதுத்­தேர்­த­லொன்­றுக்கு செல்ல வேண்டும். மொட்டுக் கட்­சி­யி­ன­ருக்கு அது பாதிப்பை ஏற்­ப­டுத்தும்.

பாரா­ளு­மன்றத்  தேர்தல் அறி­விக்­கப்­பட்டால் நிச்­ச­ய­மாக பல  கூட்­ட­ணிகள்  இணைந்து தேர்­த­லுக்கு முகங்­கொ­டுக்கும் என்­பது நிச்­சயம். ஆனால், ஜனா­தி­பதித் தேர்தல் அப்­ப­டி­யல்ல. வெற்றி பெறக் கூடிய ஆளு­மை­யுள்ள ஒருவர் கள­மி­றங்க வேண்டும். எதிர்க்­கட்­சியின் பொது வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தாச கள­மி­றங்­குவார் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதே போன்று தேசிய மக்கள் சக்தி சார்­பாக அநு­ர­கு­மா­ரவே கள­மி­றங்­க­வுள்ளார். அதில் மாற்­றங்கள் இருக்­காது.

ஆனால், தற்­போது ஜனா­தி­ப­தி­யா­க­வுள்ள ரணி­லுக்கு ஆத­ரவு தரும் பொது­ஜன பெர­மு­னவின் நிலைப்­பா­டுகள் உறு­தி­யா­ன­தாக இல்லை. எனினும், அடுத்த வருடம் இடம்­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலின் வேட்­பா­ளர்கள் குறித்து இப்­போது மொட்டுக் கட்சி வெளிப்­ப­டை­யாக பேசி வரு­கின்­றது. கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் சாகர காரி­ய­வசம் எம்.பி ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றில் மொட்டு கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளாக நால்­வரின் பெயர்கள் பரி­சீ­ல­னையில் உள்­ள­தாகத் தெரி­வித்­துள்ளார். அதில் ஒருவர் வர்த்­தகர் தம்­மிக்க பெரேரா என்றும் அவர் வெளிப்­ப­டை­யாகக் கூறி­யுள்ளார். சந்­தர்ப்பம் வரும் போது வெற்றி பெறும் வேட்­பாளர் ஒரு­வரை நாம் அறி­விப்போம் என்று அவர் கூறி­யுள்ளார். அர­சியல் பின்­னணி இல்­லாத கோட்­டா­ப­யவை நிறுத்தி தமது கட்சி பெற்ற அனு­ப­வங்­களை மஹிந்த நன்­க­றிவார். ஆகையால் தம்­மிக்க பெரேரா குறித்து இறுதி முடி­வுகள் எடுக்­கப்­ப­டு­வது சற்று தாம­த­மா­கலாம்.

ஆனால், பொது­ஜன பெர­மு­னவின் மாநாட்டில் தம்­மிக்க பெரே­ராவின் பிர­சன்­ன­மா­னது ரணி­லுக்கு மஹிந்த எதையோ குறிப்பால் உணர்த்த விரும்­பு­வது போன்றே உள்­ளது. விட­ய­ம­றிந்த மக்கள் மத்­தியில் இது வேடிக்­கை­யா­ன­தொன்­றாவே பேசப்­ப­டு­கின்­றது.  தாம் நிறுத்­திய வேட்­பா­ள­ரான  கோட்­டா­பய நாட்டை சீர­ழி­வுக்கு கொண்டு சென்ற கார­ணத்­தி­னா­லேயே மக்­களால் துரத்­தப்­பட்டார். அதை ஈடு செய்­வ­தற்கு யாரை வேண்­டு­மா­னாலும்,  மீட்பர் என்ற பெயரில் ஜனா­தி­பதி வேட்­பா­ளா­ராக பொது­ஜன பெர­முன கள­மி­றக்­கினால் மக்கள் கண்­களை மூடிக்­கொண்டு அவ­ருக்கு வாக்­க­ளிப்பர் என்ற அவர்­களின் நம்­பிக்கை வேடிக்­கை­யா­ன­தாகும்.

அதே­வேளை தன்னை அல்­லாது வேறு எவ­ரையும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக பொது­ஜன பெர­முன அறி­வித்தால் பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத் தேர்­த­லொன்­றுக்கு உட­ன­டி­யாக ஜனா­தி­பதி செல்­வ­தற்­கான சாத்­தி­யங்கள் உள்­ளன. இதன் கார­ண­மாக கட்சி சார்­பற்ற வேட்­பா­ள­ராக  ரணில் விக்­கி­ர­ம­சிங்க  கள­மி­றங்­கு­வ­தற்கும் யோசிக்­கின்றார் என தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.  

இப்­போ­தெல்லாம் பொது­ஜன பெர­மு­னவின் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ வெளிப்­ப­டை­யா­கவே ஜனா­தி­பதி ரணிலை விமர்­சித்து வரு­கின்றார். கடந்த 21 ஆம் திகதி புதன்­கி­ழமை நாட்டின் பொரு­ளா­தார நெருக்­க­டிகள் தொடர்பில் அவர் வெளி­யிட்­டி­ருந்த அறிக்கை அதற்கு சான்று பகர்­கின்­றது. நல்­லாட்சி கால பொரு­ளா­தார செயற்­பா­டு­களே நாட்டின் தற்­போ­தைய நெருக்­க­டி­க­ளுக்குக் காரணம் என்று தெரி­வித்­துள்ள அவர், தமது கட்­சியின் பொரு­ளா­தார கொள்­கை­க­ளுக்கு எதி­ரா­ன­வரே தற்­போது நாட்டின் தலை­வ­ராக இருக்­கின்றார் என்று தெரி­வித்­துள்ளார்.

நாட்டில் ஏற்­பட்ட நெருக்­கடி நிலை­மைகள் கார­ண­மா­கவே ஜனா­தி­ப­தி­யாக ரணில் தெரிவு செய்­யப்­பட்டார். அடுத்த வருடம் இடம்­பெ­ற­வுள்ள தேர்­தல்­களில் ஒரு ஸ்திர­மான அர­சாங்­கத்தை நாம் உரு­வாக்கி பொரு­ளா­தார நிலை­மை­களை சரி செய்வோம் என்று மஹிந்த கூறி­யுள்ளார். அதா­வது தாம் ஆத­ர­வ­ளித்து வரும் ஜனா­தி­பதி இந்­நாட்டின் ஒரு தற்­கா­லிகத் தலைவர் என்­பதை சொல்­லாமல் சொல்­லி­யி­ருக்­கின்றார்.

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றங்கும் ஒருவர் ஐம்­பது இலட்சம் வாக்­கு­க­ளுக்கு அதி­க­மாகப் பெற வேண்டும். இப்­போ­தைக்கு ரணிலோ, அநு­ரவோ அல்­லது சஜித்தோ அந்­த­ள­வுக்கு வாக்­கு­களைப் பெறப்­போகும் வேட்­பா­ளர்களாக இல்லை. ஏனென்றால் ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வ­தற்கு தமிழ் முஸ்லிம், மற்றும் கிறிஸ்­தவ வாக்­குகள் மிக முக்­கிய இடத்தை வகிக்­கப்­போ­கின்­றன. ஏற்­க­னவே சிங்­கள வாக்­குகள்   பிள­வுற்­றுள்­ளன. அநுர குமா­ரவின் வாக்கு விகிதம் மூன்று வீதத்­தி­லி­ருந்து இரு­பது வீத­மாக உயர்ந்­துள்­ள­தா­கவே கருத்துக் கணிப்­புகள் கூறு­கின்­றன. எனவே அவர் ஐம்­பது இலட்சம் வாக்­குகள் பெறு­வது சாத்­தி­ய­மில்லை. அதே போன்று கத்தோலிக்கர்கள்  சஜித் பக்கமே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆகவே தமிழ், முஸ்லிம், கத்தோலிக்க வாக்குகளை எவ்வாறு பெறுவது என்ற விவாதங்களும் மறுபக்கம் ஆரம்பித்துள்ளன.

அடுத்து ஆண்டின்  இறுதிப்பகுதியில் இடம்பெறவுள்ளதாகக் கூறப்படும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து இந்த ஆண்டு இறுதிப்பகுதியில் இப்படியான ஹேஸ்யங்கள் கூறப்படுவது புதுமை தான். தேசிய கட்சிகள் மற்றும் கட்சித் தலைவர்கள், எம்.பிக்கள் மத்தியில் தோன்றியுள்ள குழப்ப நிலைமைகளே இதற்குக் காரணம்.  ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்தும் முதலில் ஜனாதிபதித் தேர்தலையா அல்லது பாராளுமன்றத்  தேர்தலையா நடத்துவது என்பது குறித்தும் விவாதங்கள் செய்து வருகின்றார்களே ஒழிய, இவ்விரு தேர்தல்களும் நடந்தால் நாடு நெருக்கடிகளிலிருந்து, மீட்சி பெற்று விடுமா என்பது பற்றி எவரும் இதுவரை வாய்திறந்து எதையும் கூறவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதி கிடைக்கச் செய்வதற்கு தேர்தல் மூலமான...

2024-04-23 04:34:43
news-image

இலங்கை பின் திகதியிட்ட காசோலைகளை ஏன் ...

2024-04-23 04:27:40
news-image

புதிய யுத்தக் காட்சிப் பெட்டகம்

2024-04-23 04:20:52
news-image

தமிழ்ப் பொதுவேட்பாளர் வட,கிழக்கு அரசியல் பிரமுகர்கள்...

2024-04-23 04:15:35
news-image

பல வேடிக்கை மனிதரைப் போலே நான்...

2024-04-23 03:35:07
news-image

தனி மாநிலம் கேட்டு வீட்டுக்குள் முடங்கிய...

2024-04-22 22:44:52
news-image

முன்னணியில் இந்தியா, பிரிட்டன், ரஷ்யா, சீனா   

2024-04-22 19:14:08
news-image

ஈரான், இஸ்ரேல் பதற்றத்துக்குள் வலிந்து சிக்கப்போகும்...

2024-04-22 22:46:05
news-image

தமிழரின் உரிமைப் போராட்டத்தில் தமிழ் பொது...

2024-04-22 19:05:28
news-image

போருக்குள் தள்ளப்பட்ட ஈரான் : போருக்குள்...

2024-04-22 18:58:46
news-image

சர்வதேசம் தடுக்க தவறிய ருவாண்டா இனப்படுகொலையின்...

2024-04-22 18:54:26
news-image

இந்தியாவின் பாதுகாப்பு இராஜதந்திரம்

2024-04-22 18:45:52