யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும், விசேட நடவடிக்கையால் வாள்வெட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் சடுதியாக குறைந்துள்ளதாக யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
கடந்த சில தினங்களில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின்போது 100க்கும் அதிகமானவர்கள் கைதாகியுள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
பொலிஸார் மேற்கொள்ளும் இந்த விசேட நடவடிக்கையினால் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வந்த வாள்வெட்டு, வன்முறைகள், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் சடுதியாக குறைந்துள்ளது.
இந்த விசேட நடவடிக்கை எதிர்வரும் நாட்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM