(நமது நிருபர்)
அண்மையில் மியான்மாரில் கடத்தப்பட்ட இலங்கையர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் மியான்மார் அதிகாரிகளிடம் கோரிக்கைவிடுத்துள்ளது.
இதுகுறித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் வெளிவிவகார அமைச்சு, கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மியன்மாரில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்துவதற்கென ஆட்கடத்தல் கும்பலால் இலங்கையர்கள் கடத்தப்படும் சம்பவங்கள் பதிவாகிவருவதாகத் தெரிவித்துள்ளது.
அதேவேளை முன்னதாக மியன்மார் அரச அதிகாரிகளுடன் அந்நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் இணைந்து முன்னெடுத்த மீட்பு நடவடிக்கைகளை அடுத்து, 2022 - 2023 க்கு இடைப்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்ட 32 இலங்கையர்கள் மீட்கப்பட்டனர்.
அதேபோன்று வெளிவிவகார அமைச்சுக்குக் கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, மியன்மாரின் மியாவாடி பகுதியில் தற்போது 56 இலங்கையர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் மியன்மார் அரசு மற்றும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM