தென்னாபிரிக்க அணியின் முன்னாள் அணித் தலைவரான டீன் எல்கர் (Dean Elgar, 36) எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 2024 ஜனவரி 7ஆம் திகதி வரை அந்நாட்டில் நடைபெறவுள்ள 2 ஆட்டங்கள் கொண்ட இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (22) அறிவித்தார்.
தனது ஓய்வு தொடர்பில் அவர் கூறுகையில்,
"கிரிக்கெட் விளையாடுவது எப்போதும் எனது கனவாக இருந்து வந்தது. ஆனால், உங்கள் நாட்டு அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவது ஆகச் சிறந்ததாகும்.
சர்வதேச கிரிக்கெட்டில் 12 ஆண்டுகள் விளையாடியதை கெளரவமாகவும் பாக்கியமாகவும் கருதுகிறேன். இது நம்பமுடியாத ஒரு அருமையான பயணமாகும். எல்லா நல்ல விடயங்களும் ஒரு நாள் முடிவுக்கு வரும். அதுபோல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எனக்கு கடைசி போட்டியாகும். ஏனெனில், இந்த அழகான விளையாட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன்.
உலகில் எனக்கு மிகவும் பிடித்த மைதானமான கெப்டவுனில் எனது முதல் ஓட்டத்தை எடுத்தேன். அதே மைதானத்தில் எனது கடைசி ஆட்டத்திலும் விளையாடுகிறேன்" என்றார்.
டீன் எல்கர் 2012ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமாகி, இதுவரை 84 டெஸ்ட் போட்டியில் விளையாடி 13 சதம், 23 அரைசதம் உட்பட 5,146 ஓட்டங்களை நிறைவு செய்துள்ளார்.
19 டெஸ்ட் போட்டிகளுக்கு அணித் தலைவராக அங்கம் வகித்த இவர், 2018ஆம் ஆண்டோடு ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிய நிலையிலும், 8 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM