சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர் வழங்குவதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது.
வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு 28 வருடங்களாக சிறையில் வாடுகின்ற அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் மகஜர் ஒன்றைத் தயாரிக்கும் முகமாக குறித்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இடையேயான சந்திப்பு குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஒழுங்குபடுத்தியது.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற சந்திப்பில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிவில் சமூகத்தினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் கருத்து தெரிவித்த குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன்,
28 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை வழங்கவுள்ளோம். இதற்கு சகல பொது அமைப்புகளும் ஒன்றிணைய வேண்டும். பொது மன்னிப்பின் அடிப்படையில் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் இதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM