நியூசிலாந்தை சொந்த மண்ணில் வீழ்த்தியது பங்களாதேஷ்

23 Dec, 2023 | 03:25 PM
image

நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று (23) நடைபெற்ற 3வது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தை அந்த மண்ணிலே‍யே வீழ்த்தி பங்களாதேஷ் சாதனை படைத்துள்ளது.

 நியூசிலாந்து - பங்களாதேஷ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. முதல் 2 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்து. 

இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. 

அதன்படி, நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா 8, ஹென்றி நிக்கோலஸ் 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 

அடுத்த சிறிது நேரத்தில் வில் எங் 24 ஓட்டங்களிலும் அணித் தலைவர் டாம் லாதம் 21 ஓட்டங்களிலும் சோரிபுல் இஸ்லாம் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். 

இதனையடுத்து, களமிறங்கிய வீரர்களான டாம் பிளண்டல் 4, மால் சேப்மென் 2, ஜோஷ் கிளார்க்சன் 16 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் 31.4 ஓவரில் 98 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

பங்களாதேஷ் தரப்பில் சோரிபுல் இஸ்லாம் 3, டன்சிம் ஹசன் 3, செளமியா சர்கார் 3 விக்கெட்களை எடுத்தனர். 

அதை தொடர்ந்து 99 என்ற சுலபமான இலக்கை துரத்திய பங்களாதேஷுக்கு அனாமல் ஹைக் 37 (33) அணித் தலைவர் நஜ்முல் சாண்டோ 51 (42) ஓட்டங்கள் எடுத்து 15.1 ஓவரிலேயே 9 விக்கெட் வித்தியாசத்தில் இலகுவில் வெற்றி பெற்றனர். 

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு போட்டியில் வென்று பங்களாதேஷ் புதிய வரலாறு படைத்தது. 

2007ஆம் ஆண்டிலிருந்து  நியூசிலாந்தில் விளையாடிய பங்களாதேஷ் 18 போட்டிகளிலும் தோல்வி கண்டு வந்தது. 

எனினும், இம்முறை முதல் தடவையாக பங்களாதேஷ் வெற்றிக்கொடி நிலைநாட்டியிருக்கிறது.

அதேவேளை நியூசிலாந்து இந்த போட்டியில் பங்களாதேஷுக்கு எதிராக முதல் முறையாக 100 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட்டாகி படுவீழ்ச்சியை சந்தித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆகிய கனிஷ்ட குறிபார்த்து சுடுதலில் இலங்கைக்கு...

2025-02-17 18:05:27
news-image

லாகூர் கோட்டையில் பச்சை மின் விளக்குகளுடன்...

2025-02-17 18:02:20
news-image

பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டம் வட ...

2025-02-17 15:23:07
news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33