(எம்.மனோசித்ரா)
ஒமிக்ரோன் பிரழ்வின் துணை வகையான ஜே.என்.1 என்ற புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டின் பரவல் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த வைரஸ் ஏற்கனவே சமூகத்திற்குள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கொச்சி பிரதேசத்தில் இன்ஃப்ளுவன்ஸா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட அனைத்து நோயாளிகளிலும் 30 வீதமானோருக்கு சுமார் 24 மணி நேரத்தில் கொவிட் தொற்று இனங்காணப்பட்டுள்ளது. இதற்கு ஒமிக்ரோன் பிறழ்வின் ஜே.என்.1 துணை மாறுபாட்டின் காரணம் என சோதனை செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் சுகாதார அமைப்பு ஆபத்தில் இல்லை. ஏனெனில் அவர்கள் முந்தைய அலைகளை வெற்றிகரமாக நிர்வகித்துள்ளனர் மற்றும் தொற்றாளர்கள் அதிகரித்தால் அதனை எதிர்கொள்ள நாடு தயாராக உள்ளது. எவ்வாறிருப்பினும் தற்போது இலங்கையில் பரிசோதனை மிகவும் குறைவாக உள்ளது அல்லது பூஜ்ஜியத்தை நெருங்குவதால், வயதானவர்கள் அல்லது எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் முகக் கவசம் அணிவதைத் தொடங்குமாறும் வைத்தியர் ஜீவந்தர அறிவுறுத்தியுள்ளார்.
'தற்போது எந்த நிலைமையில் இருக்கின்றோம் என்பது தெரியவில்லை. ஆனால் கடந்த காலத்தைப் போலவே இந்த ஜே.என்.1 துணை மாறுபாடு வெளிப்படக் கூடும். இது ஏற்கனவே சமூகத்தில் இருக்கிறது என்பது என் யூகம். எனவே மக்கள் அனைவரும் காற்றோட்டம் அற்ற மூடிய, நெரிசலான சூழலில் இருந்தால், முகக்கவசத்தை அணிவது பாதுகாப்பானது, என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜே.என்.1 இன் அறிகுறிகள் காய்ச்சல், இருமல், வாசனை உணர்வின்மை, சுவை உணர்வு இழப்பு, தொடர்ந்து அதிக காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, சாப்பிட இயலாமை மற்றும் வாந்தியெடுக்கும் போக்கு ஆகியவையாகும். உலகின் சில பகுதிகளில் இது அவதானிக்கப்பட்டுள்ளது.
அறிகுறிகள் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு வலியுறுத்துகின்றேன். தடுப்பூசிகள் இன்னும் செயல்படுகின்றன, மேலும் மக்களுக்கு குறிப்பாக ஆபத்தில் உள்ளவர்களுக்கு பூஸ்டர்கள் தேவைப்படலாம் என்றும் வைத்தியர் சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM