யாழில் கைதான தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

22 Dec, 2023 | 03:15 PM
image

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைத்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 13 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் 18 மாத சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று, அதனை 05 வருட காலத்திற்கு ஒத்திவைத்துள்ளது. 

கடந்த 06ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பினுள் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 13 தமிழக கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்டவர்கள் மறுநாள், கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை அவர்களை நேற்று வியாழக்கிழமை (21) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டு இருந்தது. 

இந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது 13 கடற்தொழிலாளர்களுக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுக்களுக்கு தலா 06 மாத சிறைத்தண்டனை விதித்த மன்று அதனை 05 வருட காலத்திற்கு ஒத்திவைத்தது.

அதேவேளை படகுகள் தொடர்பிலான வழக்கு விசாரணைக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்த மன்று, அன்றைய தினம் படகின் உரிமையாளர்கள் மன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விலை திருத்தம் : பெற்றோலியக்...

2026-09-15 18:17:35
news-image

பிராந்திய கடல்சார் தகவல் மையங்களின் பிரதிநிதிகள்...

2026-09-15 18:10:28
news-image

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்...

2026-09-15 17:46:04
news-image

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்ள விசேட...

2026-09-15 17:32:19
news-image

மயிலத்தமடு - மாதவனை கால்நடை பண்ணையாளர்கள்...

2026-09-15 17:30:06
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக 24ஆம்...

2026-09-15 17:40:26
news-image

ஜனநாயக மரபுரிமைகளைப் பாதுகாத்துத் தொழில்நுட்பமும் சட்டத்தின்...

2026-09-15 17:16:53
news-image

மக்களைத் தேடிச் செல்லும் சேவை அமைப்பாக...

2026-09-15 17:13:48
news-image

போக்குவரத்துத் துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்...

2026-09-15 17:45:57
news-image

உயிரளவியல் தரவு அடையாள அட்டைக்கு எதிர்ப்பு...

2026-09-15 16:12:56
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து ஆசனங்களிலும் ஆசனப்...

2026-09-15 16:15:31
news-image

நுவரெலியாவில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் மட்டக்குதிரைகள்; விபத்து...

2026-09-15 15:26:39