வாழைப்பழம் விற்பனைக்காக தென் பகுதியில் இருந்து கல்முனை பகுதிக்கு வருகை தந்த பெண்மணியிடம் அத்துமீறி கட்டியணைத்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொதுச்சந்தை பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவராவார்.
சம்பவ தினமான வியாழக்கிழமை (21) வியாபார நடவடிக்கையில் குறித்த பெண் ஈடுபட்டு கொண்டிருந்த சமயம் 49 வயது மதிக்கத்தக்க மொனராகலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது பாதிக்கப்பட்ட குறித்த பெண் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM