புத்தளம் பகுதியில் காருடன் சைக்கிள் மோதி விபத்து ; சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

Published By: Vishnu

22 Dec, 2023 | 11:07 AM
image

புத்தளம் பகுதியில் மோட்டார் சைக்கிளை முந்திச் செல்ல முற்பட்ட கார்  மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற கார் மோட்டார் சைக்கிளை முந்தி செல்ல முற்பட்டபோது மோட்டார் சைக்கிளின் பின்னால் கார் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து புத்தளம் அநுராதபுரம் பிரதான வீதியின் சிறம்பையடி இரண்டாம் கட்டைப் பகுதியில் வியாழக்கிழமை (21) இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் காரில் பயணித்தவர்கள் உயிர்த் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் காரின் சாரதி குடிபோதையில் அதிவேகமாக வாகனத்தை செலுத்தியுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் புத்தளம் தப்போவ மஹாகொன்வெவ பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையென பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி தொடர்பில்...

2024-07-14 11:57:50
news-image

தேசிய மக்கள் சக்திக்கு சிறுபான்மையினரின் ஆதரவு...

2024-07-14 11:59:28
news-image

ஜனாதிபதி வேட்பாளர்களோடு நிபந்தனைகளுடன் பேசுங்கள் -...

2024-07-14 12:24:26
news-image

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் பெண்...

2024-07-14 11:06:04
news-image

இலங்கை தொடர்பான பயண வழிகாட்டலைத் தளர்த்துமா...

2024-07-14 10:02:13
news-image

விளக்கேற்றி பூஜை செய்து புதையல் தோண்ட...

2024-07-14 10:39:29
news-image

காத்தான்குடி - புதுக்குடியிருப்பில் எரிபொருள் பவுசர்...

2024-07-14 10:06:21
news-image

பொருளாதார, பாதுகாப்பு துறைசார் ஒத்துழைப்பை கட்டியெழுப்புதல்...

2024-07-14 09:57:02
news-image

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணி - இரண்டு...

2024-07-14 09:36:19
news-image

நாட்டின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் 

2024-07-14 09:22:44
news-image

தமிழ்த் தேசியப் பேரவையின் உடன்பாடு 17இல்...

2024-07-14 09:29:39
news-image

ஜனாதிபதி தேர்தல் 2024 : செவ்வாய்க்கிழமை...

2024-07-14 10:10:40