முல்லைத்தீவில் கனமழையால் 2,327 குடும்பங்களை சேர்ந்த 6,916 பேர் பாதிப்பு!

22 Dec, 2023 | 10:18 AM
image

கனமழையினால் ஏற்பட்ட  வெள்ள அனர்த்தம் காரணமாக  முல்லைத்தீவு மாவட்டத்தில் 2327 குடும்பங்களை சேர்ந்த 6,916 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நிலையில்  412  குடும்பங்களை சேர்ந்த 1,215 பேர் இடைத்தங்கல் முகாம்களின் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 

இவ்வாறான நிலையில் மழை சற்று குறைவடைந்த நிலையில் வெள்ளநீர் வடிந்தோடிய நிலையில் ஏழு  இடைத்தங்கல் முகாம்களின் பாதுகாப்பாக  தங்க வைக்கப்பட்டிருந்த   412  குடும்பங்களை சேர்ந்த 1,215 பேரும் அவர்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளர். 

அந்தவகையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியங்குளம் பொதுநோக்கு மண்டபத்தில் அமைக்கப்பட்ட   இடைத்தங்கல் முகாமில் இருந்த புளியங்குளம்  கிராம அலுவலர் பிரிவின் 6 குடும்பங்களை சேர்ந்த 24 பேரும், கருவேலங்கண்டல் அ.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட இடைத்தங்கல் முகாமில் இருந்த பண்டாரவன்னி கிராம அலுவலர் பிரிவின்   63 குடும்பங்களை சேர்ந்த 201 பேரும் கருவேலங்கண்டல் கிராம அலுவலர் பிரிவின்  6 குடும்பங்களை சேர்ந்த 22 பேரும்  கூழாமுறிப்பு அ.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட இடைத்தங்கல் முகாமில் இருந்த  கூழாமுறிப்பு கிராம அலுவலர் பிரிவின்  73 குடும்பங்களை சேர்ந்த 203 பேரும் முத்துஐயன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட   இடைத்தங்கல் முகாமில் இருந்த முத்துவிநாயகபுரம் கிராம அலுவலர் பிரிவின்  37 குடும்பங்களை சேர்ந்த 104 பேரும் தட்டயர்மலை கிராம அலுவலர் பிரிவின் 18 குடும்பங்களை சேர்ந்த 50 பேரும் பேராறு தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட  இடைத்தங்கல் முகாமில் இருந்த பேராறு கிராம அலுவலர் பிரிவின்   24 குடும்பங்களை சேர்ந்த 70 பேரும் 19.12.2023 அன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 

இதேபோன்று மன்னாகண்டல் அ.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட  இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மன்னாகண்டல் கிராம அலுவலர் பிரிவில் பாதிக்கப்பட்ட 173 குடும்பங்களை சேர்ந்த 498 பேரும்   கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்குதொடுவாய் வடக்கு முன்பள்ளியில் அமைக்கப்பட்ட இடைத்தங்கல் முகாமில் இருந்த கொக்குதொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில்  பாதிக்கப்பட்ட12 குடும்பத்தை சேர்ந்த 43 பேரும் நேற்று (21) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் . 

இவ்வாறான நிலையில்  மாவட்டத்தில் அமைக்கப்பட்ட  ஏழு இடைத்தங்கல் முகாம்களும்  முழுமையாக அகற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் அனத்ர்த நிலைமை தொடர்பாக   முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரின்  வியாழக்கிழமை  மாலை  4.30 மணிக்கு வெளியிடப்பட்ட  அறிக்கையில்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில்  முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிலே அம்பாள்புரம், கரும்புள்ளியான், ஒட்டறுத்தகுளம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், சிராட்டிகுளம், சிவபுரம், மூன்றுமுறிப்பு, பூவரசங்குளம்,விநாயகபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 333 குடும்பங்களை சேர்ந்த 1,076 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி,கருவேலன்கண்டல், இந்துபுரம்,  புளியங்குளம், தச்சடம்பன், கூழாமுறிப்பு, கனகரத்தினபுரம் ,காதலியார்சமணங்குளம், பழம்பாசி, தண்டுவான், ஒட்டுசுட்டான்,பேராறு, மணவாளன்பட்டமுறிப்பு, கணேசபுரம்,முத்துவிநாயகபுரம், தட்டையர்மலை, வித்தியாபுரம், அம்பகாமம், முத்துஐயன்கட்டுக்குளம் கற்சிலைமடு, திருமுருகண்டி    ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 795 குடும்பங்களை சேர்ந்த 2,362 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதேபோன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட  சிலாவத்தை, செல்வபுரம், வற்றாப்பளை, தண்ணிமுறிப்பு, முள்ளியவளை தெற்கு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு கொக்குத்தொடுவாய் வடக்கு, செம்மலை, தண்ணீறூற்று கிழக்கு, கணுக்கேணி மேற்கு, அளம்பில்வடக்கு, மாமூலை அம்பலவன்பொக்கணை, வண்ணாங்குளம், குமாரபுரம், முள்ளியவளை தெற்கு, முள்ளியவளை மேற்கு, அளம்பில் தெற்கு, உப்புமாவெளி, கேப்பாபுலவு  மதவளசிங்கன்குளம், கொக்குத்தொடுவாய், முள்ளியவளை மத்தி  குமுழமுனை மேற்கு  ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 450 குடும்பங்களை சேர்ந்த 1,366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அணிஞ்சியன்குளம், உயிலங்குளம், தென்னியங்குளம், கோட்டைகட்டிய குளம், ஆலங்குளம், தேராங்கண்டல், கல்விளான், மல்லாவி, யோகபுரம் கிழக்கு, புகழேந்திநகர், பாரதிநகர், யோகபுரம் மேற்கு, அம்பலப்பெருமாள்குளம், அமைதிபுரம், புத்துவெட்டுவான், பழையமுறிகண்டி, ஐயன்கன்குளம், துணுக்காய், யோகபுரம் மத்தி, திருநகர் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 251 குடும்பங்களை சேர்ந்த 765 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு மேற்கு, தேவிபுரம், மாணிக்கபுரம், உடையார்கட்டு வடக்கு, விசுவமடு மேற்கு, வள்ளுவர்புரம், மன்னாகண்டல், தேராவில், இரணைப்பாலை, ஆனந்தபுரம், உடையார்கட்டு தெற்கு மல்லிகைத்தீவு, ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 480 குடும்பங்களை சேர்ந்த 1,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் கல்யாணபுர, நிக்கவெவ தக்குண, ஜனகபுர, கஜபாபுர    ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த 18 குடும்பங்களை சேர்ந்த 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையிலே மொத்தமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,327 குடும்பங்களை சேர்ந்த 6,916 பேர்  பாதிக்கப்பட்டுள்ளர்.  32 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது  என தெரிவிக்கப்படுகிது. 

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேரு பகுதிகளிலும் இடையிடையே மழை பெய்துவருகிறது குறிப்பாக  பாதிக்கப்பட்ட  மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள், அமைப்புக்கள் தனி நபர்கள் என பல்வேறு தரப்பினரும் மக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் உலருணவு பொருட்களை வழங்கி வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உறுதி...

2024-06-13 22:29:31
news-image

ரணிலின் வேலைத்திட்டமே சர்வதேச நாணய நிதியத்தின்...

2024-06-13 16:48:39
news-image

பயங்கரவாதிகள் போல் செயற்படுவதை எதிர்க்கட்சிகள் தவிர்க்க...

2024-06-13 16:54:47
news-image

கிராம உத்தியோகத்தர்களின் புதிய சேவை யாப்புக்கு...

2024-06-13 20:54:34
news-image

நாளை 2 மணிக்குள் சாதகமான பதிலின்றேல்...

2024-06-13 17:35:08
news-image

நுவரெலியாவில் உடலின் கீழ் பகுதி இல்லாமல்...

2024-06-13 20:19:38
news-image

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய...

2024-06-13 19:53:18
news-image

இரு முச்சக்கர வண்டிகள் நேருக்குநேர் மோதி...

2024-06-13 19:07:27
news-image

அலங்கார மீன் ஏற்றுமதி மூலம் கடந்த...

2024-06-13 17:36:34
news-image

மன்னாரிலும் தபால் தொழிற்சங்கத்தினர் சுகயீன போராட்டம்

2024-06-13 17:34:27
news-image

இஸ்ரேலில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி...

2024-06-13 17:33:18
news-image

தமிழகத்தில் கரையொதுங்கிய அனலைதீவு கடற்றொழிலாளர்களை நாட்டிற்கு...

2024-06-13 17:27:50