பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் எவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை கிடையாது - பதில் பொலிஸ் மா அதிபர்

Published By: Digital Desk 3

22 Dec, 2023 | 09:21 AM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டிலிருந்து  போதைப்பொருளை முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டமே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் 4 ஆயிரம் பேர் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்துள்ளனர். 

இந்த சிறந்த செயற்பாட்டுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களுக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது. பாதாளக்குழு செயற்பாடுகளையும் போதைப்பொருள் பாவனையையும் முற்றாக அழிப்பதற்கு நாட்டு மக்கள்  பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வடக்கு சமூக பொலிஸ் குழு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உங்களின் குடும்பங்களை இல்லாமல் ஒழிக்கும் போதைப்பொருளை முற்றாக அழிக்கும் வேலைத்திட்டமே இதுவாகும். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ள போதைப்பொருள் நகரங்கள் முதல் சிறு பிரதேசங்கள் வரையில் பரவியுள்ளது. அவற்றை முற்றாக சமூகத்தில் இருந்து அழிக்க வேண்டும். எனவே இந்த சிறந்த செயற்பாட்டுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களுக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது. பாதாளக்குழு செயற்பாடுகளையும் போதைப்பொருள் பாவனையையும் முற்றாக அழிப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அதற்காக சிறந்த திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம். எதிர்காலத்திலும் செயல்படுத்துவோம்.

சில பிரதேசங்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்வது யாரென்பது குற்றப்புலனாய்வு பிரிவினர் எமக்கு அறிவித்துள்ளனர். 

எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படாத மற்றும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட போதைப்பொருட்கள் உங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை சீர்குலைக்கின்றது.

இந்த பொலிஸ் விசேட சுற்றிவளைப்பு போதைப் பொருட்களை இறக்குமதி செய்யும் தரப்பினரை இலக்கு வைத்தே மேற்கொள்கிறோம். மேற்கொள்ளப்பட்டுள்ள ஒவ்வொரு சுற்றிவளைப்புகளின் போதும் மிக முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களுள் போதைப்பொருள் விற்பனை செய்யும் தரப்பினரும் உள்ளடங்கியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 4 ஆயிரம் பேர்  பாடசாலை மாணவர்களுக்கு போதை பொருளை விற்பனை செய்துள்ளனர். இவர்களை கைது செய்து அவர்களிடமிருக்கும் சொத்துக்களையும் கைப்பற்றும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தல்களை...

2024-09-07 18:28:56
news-image

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றிபெற்று தமிழர்களின்...

2024-09-07 22:59:45
news-image

அநுர கூறுவதைப் போன்று சிங்கள மக்களின் ...

2024-09-07 18:22:22
news-image

மாகாண சபை முறைமையை மீண்டும் பலப்படுத்தி...

2024-09-07 22:26:01
news-image

எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடேன் - பா.அரியநேத்திரன்

2024-09-07 14:22:14
news-image

கடந்து வந்த பாதையை ஜனாதிபதி மறந்துவிட்டார்...

2024-09-07 18:17:06
news-image

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்...

2024-09-07 17:30:15
news-image

கருத்துச் சுதந்திரம் பாதிப்பற்ற வகையில் கண்காணிக்கப்பட...

2024-09-07 18:12:30
news-image

சிலாபம் - புத்தளம் வீதியில் விபத்து;...

2024-09-07 18:25:56
news-image

ராஜபக்சர்கள் சீரழித்த நாட்டை மீண்டும் ரணில்,...

2024-09-07 21:53:36
news-image

கல்முனையில் யானையால் தாக்கப்பட்டு யாசகர் பலி

2024-09-07 17:57:54
news-image

பொத்துவில் பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர்...

2024-09-07 17:35:27