திவுலபிட்டிய பிதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தின் போது பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத ஆகியோருக்கு இடையே நேற்று உச்சக்கட்ட மோதலொன்று இடம்பெற்றுள்ளது.
திவுலபிட்டிய பிரதேச செயலக அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த கூட்டத்தின் போது பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுரத மற்றும் திவுல பிட்டிய பிரதேச செயலாளர், பிரதேச பொலிஸ் அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த கூட்டத்தின் போது, அண்மையில் திவுலபிட்டிய பகுதியில் இடம்பெற்ற அண் அகழ்வு தொடர்பாக தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன் போது ரஞ்சன் ராமநாயக்க மற்றும் இந்திக இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதோடு இருவரும் மோதிக்கொள்ளும் அளவிற்கு சென்றனர்.
எனினும் அருகில் இருந்த அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இருவரையும் தடுத்து நிறுத்தினர்.
இருவரும் நேருக்கு நேராக கடுமையான சொற்பிரயோகங்களை பறிமாறிக்கொண்டதோடு இடைஇடையே மோதிக்கொள்ள எத்தனித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM