(எம்.மனோசித்ரா)
பிரபாகரனின் மகள் எனக் குறிப்பிட்டு பெண்ணொருவர் பேசுவதைப் போன்று காணொளியை வெளியிட்ட நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் எனத் தெரிவிக்கப்பட்டு பெண்ணொருவர் பேசுவதைப் போன்று வெளியிடப்பட்ட காணொளி தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. அதற்கமைய அது தயாரிக்கப்பட்ட ஒரு காணொளி என்பது இனங்காணப்பட்டுள்ளது.
அது தொடர்பில் பயங்கரவாத விசாரணைப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு என்பன விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. இவ்வாறான காணொளிகளை வெளியிடுபவர்களை எவ்வாறேனும் இனங்கண்டு அவர்களை நிச்சயம் கைது செய்வோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM