கல்லீரல் கவனம் !

21 Dec, 2023 | 04:01 PM
image

நாளாந்தம் நாம் உணவு உண்கிறோம். அந்த உணவு, எப்படி எமது உடலுக்குப் போஷாக்கு அளிக்கிறது என்று எண்ணிப் பார்த்திருக்கிறோமா?

வயிறு அல்லது இரைப்பையிலிருந்து முன் சிறுகுடல் பகுதிக்கு உணவு வருகிறது. அது கூழாகி முன் சிறுகுடலுக்கு வந்த உணவில் மீதமிருக்கும் மாச்சத்து, புரதம் ஆகிய இரண்டும் நொதிகளின் துணையுடன் சீரணமாகின்றன.

முன் சிறுகுடலில் உணவு சீரணிக்கத் துணைபுரியும் முக்கிய செரித்தல் சுரப்பி ‘பேங்க்ரியாஸ்’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கணையம். இது வயிற்றின் அடிமுனையின் கீழ் இருக்கிறது. இதன் நாளமும் கல்லீரல் நாளமும் இணைந்திருக்கின்றன.

கணையத்திலிருந்து செரிமானத்துக்கு உதவ கணைய நீர் சுரக்கும். இந்த நீர் மாச்சத்து, புரதம், கொழுப்பு ஆகியவை சீரணமாக உதவுகிறது. இந்த நீரில் ‘அமிலேஸ் டிரிப்சின்’, ‘லிபேஸ்’ ஆகிய நொதிகள் (என்சைம்கள்) உள்ளன. சீரணிக்க உதவ கணைய நீர் முன் சிறுகுடலுக்குச் செல்லும் உடலின் ஆற்றலுக்கு உறுதுணையாக விளங்க இன்சுலினையும் கணையம் சுரக்கிறது.

கல்லீரலின் முக்கியத்துவம்

நாம் உண்ணும் உணவு, சரியாக அரைக்கப்பட்டாமல் வயிற்றுக்குள் வந்தாலோ அல்லது சத்துக் குறைவான பொருட்களை நாம் உண்டாலோ கல்லீரலின் சுமை அதிகரிக்கும். ரத்த உறைதலுக்குத் தேவைப்படும் விற்றமின் கேயை உற்பத்தி செய்வது கல்லீரல். மாச்சத்து, புரதச் சத்து, விற்றமின் ஏ, பி ஆகியவற்றை பதப்படுத்தி அது சேமித்து வைக்கிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றுகிறது. குறிப்பாக ரத்தத்தில் கலந்திருக்கும் அமோனியா என்ற நச்சுப் பொருளை யூரியா என்ற நச்சுத் தன்மை இல்லாத பொருளாக கல்லீரல் மாற்றுகிறது. இத்தகைய முக்கியமான பல பணிகளைச் செய்யும் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையும். எனவே உடல் நலத்தில் கல்லீரல் முக்கியப் பங்கு வகிக்கிறது.

கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்

சோர்வு, பசியின்மை, பித்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதால் உருவாகும் மஞ்சள்காமாலை, உடலின் எடை குறைவு, காயம் ஏற்பட்டால் ரத்தம் உறைதலுக்கு தாமதம், உடல் வலுமின்மை, கண் பார்வை குறைபாடு, கல்லீரல் சுருக்கம் காரணமாக ரத்த வாந்தி ஆகியவை கல்லீரல் பாதிப்பின் முக்கிய அறிகுறிகள்.

கல்லீரலை எப்படிக் காப்பது?

நன்கு காய்ச்சி, வடிகட்டிய நீரையே எப்போதும் குடிக்க வேண்டும். மலேரியா காய்ச்சல் ஏற்படாமல் தவிர்க்க கொசுத் தொல்லை இல்லாமல் பாரத்துக் கொள்ள வேண்டும். நெருப்புக் காய்ச்சல் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். வீதிகளில் விற்கப்படும் ஈ மொய்த்த பண்டங்களைச் சாப்பிடக்கூடாது.

மஞ்சள் காமாலை வகைகளான ஹெபடைடிஸ் ஏ, ஹெபடைடிஸ் பி ஆகிய நோய்கள் வராமல் தடுத்துக் கொள்ளும் வகையில் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள வேண்டும். புகை மற்றும் மதுப்பழக்கத்தைக் கைவிட வேண்டும்.

- கே.ஆர்.கோபி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32
news-image

ட்ரைஜெமீனல் நியுரால்ஜியா எனும் முக நரம்புகளில்...

2024-04-05 09:27:49