பதைபதைக்க வைக்குமா ‘நிறங்கள் மூன்று?’

21 Dec, 2023 | 02:06 PM
image

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்குள் நுழைந்தது மட்டுமன்றி, தனக்கான ஒரு தனியிடத்தையும் பெற்றிருப்பவர் இயக்குனர் கார்த்திக் நரேன். 

இளம் வயதிலேயே வெற்றிப் படத்தை இயக்கியதன் மூலம், தமிழ் திரையுலகின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்கள் வரிசையும் இவர் இடம்பெற்றிருக்கிறார்.

இவரது அடுத்த படமான ‘நிறங்கள் மூன்று’ வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

கடந்த வருடமே இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. பின் தயாரிப்பு உட்பட அனைத்துப் பணிகள் ஒவ்வொன்றும் நிறைவடைந்து வரும் நிலையில், 2024 ஆரம்பத்திலேயே நிறங்கள் மூன்றை வெளியிட முடிவு செய்திருக்கிறது படக் குழு.

‘ஹைப்பர்லிங்க் த்ரில்லர்’ வகையில் இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியும் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற பதைபதைப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. துருவங்கள் பதினாறும் இதே வகையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்துக்கு உயிரோட்டமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள் அதர்வா, சரத்குமார் மற்றும் கார்த்திக் நரேனின் ஆஸ்தான நடிகரான ரகுமான். இவர்களுடன் பழைய நடிகர் சின்னி ஜெயந்த், யதார்த்த நடிப்பைத் தரும் ஜோன் விஜய் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். தயாரிப்பாளரும் நடிகருமான ஜெயப்பிரகாஷின் மகன் துஷ்யந்தும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right