பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரிலிருந்து பாகிஸ்தான் வீரரான குர்ரம் ஷாசாத் விலகியுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 360 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து, இந்த இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் விளையாடி காயமடைந்த பாகிஸ்தான் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் குர்ரம் ஷாசாத் தனது அணியிலிருந்து விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடப்போகும் மாற்று வீரர் யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை.
குர்ரம் ஷாசாத் முதல் டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களையும் சேர்த்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM